பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

410
சிறைபோன்றாகும் என அருமறையின்கண் மொழிந்தருளினை எந்தையே! நீ எளியேனை இன்னமும் அவ்வல்லலின்கண்ணே அழுத் துவையாயின் அடியேன் நாட்டமாகிய சிந்தை தெளிவுற்று உய்யும் வகை எவ்வண்ணமென மொழிந்தருள்வாயாக.

(10)
துய்யன் தண்ணருள் வடிவினன் பொறுமையால் துலங்கும்
மெய்யன் என்றுனை ஐயனே அடைந்தனன் மெத்த
நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றைநூ றாக்கும்
பொய்ய னென்றெனைப் புறம்விடின் எனசெய்வேன் புகலாய்.
    (பொ - ள்.) மிக்கதூய்மையுடையன், குளிர்ந்த திருவருளே திருவடிவாகத் திகழ்பவன், அளவிலாப் பொறுமையுருவாய்த் திகழும், புண்ணிய மெய்யன், என்று அழகும் முதன்மையும் வாய்ந்த ஐயனே! நின் திருவடியினையே புகலென அடைந்தனன்; நனிமிகச் சிறியேன். நுண்மையான அறிவு பெறாதவன்; ஒரு பொய்யினைக் கூறி நிலைநாட்டும் பொருட்டு மேலும் மேலும் நூறாக அப் பொய்யினையே பெருக்கிப் புகலூர்பொய்யன் என்று என்னைப் புறந்தள்ளிவிட்டால் அடியேன் என்செய்வேன்; திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(11)
ஒன்ற தாய்ப்பல வாய்உயிர்த் திரட்கெலாம் உறுதி
என்ற தாய்என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய
நின்ற தாய்நிலை நின்றிடும் அறிஞஎன் நெஞ்சம்
மன்ற தாய்இன்ப வுருக்கொடு நடித்திடின் வாழ்வேன்.
    (பொ - ள்.) பொருட்டன்மையில் ஒன்றாய், பலவுயிர்க்கூட்டங் களுக்கொல்லாம் கலப்பினால் தாங்கும் நிலைக்களமாய் உதவும் தன்மையால் என்றும் நீங்காது நிற்பதாய், எல்லாவற்றுடனும் இயைந்து நிற்பதாய், மாறாது ஒன்றுபோல் என்றும் நின்றிடுகின்றதாயுள்ள மூதறிஞனே! அடியேனுடைய புல்லிய நெஞ்சினைப் பொன்மறைமாகக் கொண்டருளித் திருக்கூத்தினை நீ இயற்றியருள்வையாயின் எளியேன் வாழ்வெய்துவேன். மூதறிவு - முற்றுணர்வு.

(12)
தனியி ருந்தருட் சகசமே பொருந்திடத் தமியேற்
கினியி ரங்குதல் கடனிது சமயமென் னிதயக்
கனிவும் அப்படி யாயின தாதலாற் கருணைப்
புனித நீயறி யாததொன் றுள்ளதோ புகலாய்.
    (பொ - ள்.) ஆருயிர்கள் பொறிபுலன்களில் கூடாது உண்முகப்பட்டுத் தனித்திருந்து திருவருட்டன்மையான பேரின்பத்து, ஓவாதழுந்துதலாகிய சகச நிட்டையினைப் பொருந்தும்படி நின்னையே பற்றிக்கிடக்கும். அடியேனுக்கும் அந்நிலையினையே இனி இரங்கியருளுதல் நின் கடனாகும்-அதற்கு இதுவே தக்க செவ்விப் பொழுது: எனியேனுடைய உள்ளத்தின் உறுதியான கனிவும்