என்று அழைக்கும் உள்ள நிலைப்பண்பு கண்ணீர்வார்தல்; அக் கண்ணீருடன், உறைநிலைப் பண்பாகிய ஐயோ வென்று அழுது, (உடற்பண்பாகிய தொழுது) வந்தடைந்த அப்பனே! நீ மனக்கலக்கமின்றி நெருங்கி வருவாயாக. உன்னுடைய ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் உண்மை உணர்ந்து என்பால்1 ஒப்புவித்து விட்டனையன்றோ? ஒப்புவித்தபடியே உறுதியுடன் நில்லாது அப்பொருள்களிற் பற்றுக் கொண்டு கலங்குவது எதன் பொருட்டு? ஒப்புவித்தபடி நிற்பாயாக. அதுவே உண்மைநிலை யாகும்.
(54)
நில்லாப் பொருளை நினையாதே நின்னையுள்ளோர் | சொல்லாப் பொருட்டிரளைச் சொல்லாதே - கல்லாத | சிந்தை குழைந்துசுகஞ் சேரக் குருவருளால் | வந்தவழி நல்ல வழி. |
(பொ - ள்.) நிலையில்லாத மாயாகாரியப் பொருள்களைச் சிறிதும் நினையாதே; உன்னைத் தமக்குட்படுத்தி உன்னோடுள்ளார் சொல்லத்தகாத பொருட்கூட்டங்களைப் பேசாதே; உண்மைகளைக் கற்றுக்கொள்ளாத மனம் குழைந்துருகி அழியாப்பேரின்பப் பேறு பெற்றின்புறச் சிவகுருவானவர் திருவாய் மலர்ந்தருளிய அருளின் வழி எதுவோ? அதுவே நன்னெறியாகும். (அவ்வழியையே கைக்கொண்டு உறுதியுடன் நிற்பாயாக)
(55)
வழியிதென்றும் அல்லா வழியிதென்றுஞ் சொல்லில் | பழிபழியாம் நல்லருளாற் பார்த்தோர் - மொழியுனக்கே | ஏற்றிருக்கச் சொன்னவன்றே எங்கும் பெருவெளியாம் | பார்த்தவிட மெல்லாநீ பார். |
(பொ - ள்.) இது (திருவடிப்பேற்றிற்குரிய) நல்லவழியென்றும் இஃது அதற்காகாத தீயவழியென்றும் சொல்லால் வெளிப்படுத்தின் அது மிகவும் பிழையாகும்; சிவகுருவின் நல்லருளால் திருநோக்கம் புரிந்து, ஒப்பில்லாத 'சிவ' என்னும் ஒரு மொழியை உனக்கு ஓதியதனை நீ கேட்டவன்றே எவ்விடத்தும் உனக்குத் திருவருட் பெருவெளியாகும்; நோக்கின இடமெல்லாம் மீண்டும் நீ பார்ப்பாயாக.
(56)
பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் | ஆருந் துறக்கை அரிதரிது - நேரே | மனத்துறவும் அப்படியே மாணா இவற்றில் | உனக்கிசைந்த வாறொன்றே ஓர். |
(பொ - ள்.) (மாயாகாரியமாகத் தோன்றிய இந் நிலவுலகமனைத்தும் தோன்றியவாறே ஒடுங்குந்தன்மைத்து. அதுபற்றி நிலையில்லதென்று கூறுப. நிலையில்ல தென்பதும் பொய்யென்பதும் ஒன்றே.) சுட்டியுணரப்படும் உலகமனைத்தும் பொய்யென்னும் மெய்ம்மையினைத்
1. | 'அன்றே என்றன்.' 8. குழைத்தபத்து, 7. |