சிந்தித்திருப்பதுவே சும்மாவிருத்தல்) சிவனே என்று இருப்பதுவே மாயாகாரியச் சுட்டொழிந்து திருவருட் காரியமாகிய முழுநிறையில் அடங்குதலென அடியேனால் அறியப்படுதற்கு அத்துணை எளிதாகுமோ?
(70)
முன்னொடுபின் பக்கம் முடியடிநாப் பண்ணறநின் | தன்னொடுநான் நிற்பதென்றோ சாற்றாய் பராபரமே. |
(பொ - ள்) அடிகளே! அடியேன் தேவரீருடைய "முன், பின், இருபக்கம், முடி, அடி, நடு" என்று சொல்லப்படும் ஏழிடங்களில் ஏதாவது ஒரு பக்கத்தே நின்று நிலையாது நின் திருவடியில் இரண்டறக் கலந்து முப்புணர்ப்பெய்தி எல்லாப் பக்கமும் எழிலுற நிறைந்து ஏழையேன் நின்னுடன் நிற்பது எந்நாளோ? திருவாய்மலர்ந்தருள்வாயாக.
(வி - ம்) இரண்டறக் கலத்த லென்பது தன்னை மறந்து தலைவன் தாளிணையே நினைந்து அடங்கி நிற்றல். முப்புணர்ப்பென்பது ஒன்றாய், வேறாய், உடனாய் உறைவது. அஃதாவது அன்பினால் ஒன்றாய் அறிவினால் வேறாய், ஆற்றலாம் நுகர்வால் உடனாய்த் திகழ்வது. அஃதாவது சிவன்பாலே அன்பு கொளல் சிவனையே அறிதல்; சிவனடிப் பேரின்பினையே நுகர்தல்.1 நாப்பண் - நடு.
(71)
மைவ்வண்ணந் தீர்ந்த மவுனிசொன்ன தெவ்வண்ணம் | அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே. |
(பொ - ள்) ஐயமுந்திரியும் அற்று மாசறு காட்சியுடைய மோனகுரு அடியேனுக்குச் சொல்லியருளியது எம்முறையோ? அம்முறையில் சிவனுகர்வு நிட்டைநிலையினை அருள்புரிவாயாக.
(72)
வித்தன்றி யாதும் விளைவதுண்டோ நின்னருளாஞ் | சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பராபரமே. |
(பொ - ள்) மரஞ்செடிகொடி முதலிய நின் உடைமையாதிய நிலைத்திணைப்பொருள்கள் வித்தாகிய முதற்காரணமில்லாமல் விளைவதுண்டோ? அதுபோல் நின்னடிமையாகிய யாங்கள் நின் திருவருளறிவின் துணையாகிய வினைமுதற்காரணமின்றி ஏதும் அறிவதும் செய்வதும் அன்புகொள்வது முண்டோ? (இல்லை என்க.) வினைமுதற்காரணம் - நிமித்தகாரணம்.
(73)
ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே | தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே. |
(பொ - ள்) இருவகைச் செருக்காகிய ஆங்காரம் அறவே அற்றுத் தேவரீருடைய அறிவே முற்றாக நிறைந்து அவ்வறிவு வண்ணமாய் நீங்காது நிற்கும் மெய்யன்பருக்கே சிவச்செறிவுடன் (சிவயோகம்) தங்கும் தூங்காத தூக்கம் வாய்க்கும்.
1. | 'அறிவானும்.' 11. காரைக். அற்புதம் - 20. |