(பொ - ள்) நாட்டம் எனப்படும் சிந்தை கசிந்து கசிந்து பேரறிவுமயமாகிய நின்திருவடி நிழலை வந்தடைந்தவர்க்கே பேரின்பப் பெருநிலை வாய்க்கும்.
(75)
சொல்லாடா வூமரைப்போற் சொல்லிறந்து நீயாகின் | அல்லால் எனக்குமுத்தி ஆமோ பராபரமே. |
(பொ - ள்) பேச்சுப் பொறியின் பிழையினால் பேசமுடியாத ஊமர்களைப் போன்று, பேசும்வாய்ப்புப் பெற்ற அடியேனும் பேசா நிலையினை எய்தித் தேவரீருள்ளடங்கித் தேவரீரேயாகி நின்றாலல்லாமல் அடியேனுக்குத் திருவடிப்பேறு கிடைக்குமோ?
(வி - ம்) ஒருவர் உணர்வு எப்பொருளினுள்ளடங்கி நிற்கின்றதோ? அப்பொருட்கு அவர் அடிமையாவர். அடிமையாம் நிலையே அப்பொருளாம் நிலைமையாம். இதுவே 1 "சிவோகம்பரவனை" யாம்.
(76)
பேச்சாகா மோனம் பிறவா முளைத்ததென்றற் | காச்சாச்சு மேற்பயனுண் டாமோ பராபரமே. |
(பொ - ள்) உரையற்ற ஊமைநிலை யென்பது மவுனம். அம் மவுன நிலை அடியேனுக்குத் திருவருளால் கைகூடிற்று. அதுகாரணமாக விளையும் பயனாகிய திருவடிப்பேறும் எளியேனுக்கு உண்டாமோ? (உண்டாகும் என்பதாம்.)
(77)
கெட்டியென்றுன் அன்பர்மலங் கெட்டயர்ந்தோர் பூரணமாந | தொட்டிலுக்குட் சேய்போல் துயின்றார் பராபரமே. |
(பொ - ள்) மிக்கதிறலுடையோர் என்று உலகோரால் சொல்லப்பட்ட நின்மெய்யன்பர் நின்திருவருளால் மலம் ஒழியப்பெற்று, அயர்வுற்று ஒப்பில்லா நிறைவாம் நின்திருவடித் தொட்டிலினுள் சேய்போன்று துயின்று பேரின்ப முற்றனர்.
(78)
காட்ட அருள்இருக்கக் காணா திருள்மலத்து | நாட்ட மெனக்குவரல் நன்றோ பராபரமே. |
(பொ - ள்) ("அவனருளாலே அவன்றாள் வணங்கி" என்னும் திருமுறைப்படி) நின்னை அடியேனுக்குக் காட்டியருளும் பொருட்டு நின்திருவருள் வெளிப்படையாகக் காத்திருக்க (அடியேன் அதன்வழியொழுகிக்) காணாது, இருண்மலத்தின் வழியொழுகி மாயாகாரியப்
1. | 'அறிவரியான்.' சிவஞானசித்தியார், 12, 3 - 1. |