பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


562


நித்திரையிற் செத்தபிணம் நேருமுடற் கிச்சைவையாச்
சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே.
     (பொ - ள்) நாடோறும் ஒவ்வொருவரும் உறங்கும் காலத்து அவர்தம் உடம்பு பிணம்போன்று செயலற்றுக் கிடக்கின்றது. அத்தகைய நிலைமை யினையுடைய இவ் வுடம்பின்மேல் பற்றுக்கொள்ளாத தூய மனமுடையோரே நல்ல மெய்த்துறவினராவர்.

(197)
எந்நெஞ்ச மேனும் இரங்குமே நின்னருட்குக்
கன்னெஞ் சரும்உளரோ காட்டாய் பராபமே.
     (பொ - ள்) தேவரீருடைய திருவருளின் திருமுன் எத்தகைய உள்ளமும் உருகும். அங்ஙனமன்றி உருகாத கன்னெஞ்சினரும் உளராவரோ? காட்டியருள்வாயாக. இரங்கும் - உருகும்.

(198)
மந்தஅறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால்
சிந்தைமயங் காதோஎன் செய்வேன் பராபரமே.
     (பொ - ள்) கூர்த்தமதி யில்லாத மந்த அறிவினை அடியேன் உடையனாகி, அதனால் வாய்க்கவேண்டிய திருவடியின்பம் வாய்க்கப்பெறாது இருந்து துன்பத்தில் ஆழ்ந்து அலைந்து திரிந்தால் அடியேன் மயக்கமுறாது மற்றென்செய்வேன்!

(199)
தேடினேன் திக்கனைத்துந் தெண்டனிட்டேன் சிந்தைநைந்து
வாடினேன் என்மயக்கம் மாற்றாய் பராபரமே.
     (பொ - ள்) திருவருளாசான் எந்நாள் எழுந்தருள்வரோ என்று யாங்கணும் பெருவேட்கையுடன் தேடினேன்; நின் திருவருள் எல்லா இடங்களிலும் நீக்கமற அகல் நிறைவாய்ப் பரந்திருக்கும் பண் புணர்ந்து எல்லா இடங்களிலும் வீழ்ந்து வணங்கிக் கும்பிட்டேன். (திருவருளாசான் எழுந்தருளாமையால்) எண்ணம் கலங்கி வாடினேன்; வாடிய எளியேனுடைய மயக்கத்தினை மாற்றியருள்வாயாக.

(200)
மடிமையெனும் ஒன்றை மறுத்தன்றோ என்னை
அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே.
     (பொ - ள்) (சிவபெருமானே நின் திருவடியுணர்வினை நினையவொட்டாமல் அடியேனைத் தடுத்துக்கொண்டிருக்கும் ஆணவ முனைப்பாம் மடியினை நீக்கினாலன்றி யான் எங்ஙனம் உய்வேன்?) என்பாலுள்ள மடியினை யறுத்தருளியன்றோ வேந்தே! அடியேனை ஆட்கொண்டருளுதல் வேண்டும்?

(201)
காலர்பயந் தீரஇன்பக் காற்கபய மென்றெழுந்த
மாலை வளர்த்தனையே வாழி பராபரமே.
     (பொ - ள்) நமன் தூதரால் ஏற்படும் பிறப்பினுக்கு வாயிலாம் இறப்புக்கு ஏற்படும் பேரச்சம் நீங்கும் பொருட்டு நின் திருவடிப் புகலாம்