(பொ - ள்) அடியேன் அறிவினைப் போன்று நின்திருவருளால் எளியேன் மனமும் செயலற்று அடங்கிவிடுமேயானால், பின்பு ஏழையேனைக் கொண்டு செய்விக்கும் செயலனைத்தும் நின் திருவருட் செயலாகக் கண்டு1 வாழ்வேன்.(325) பந்தமெலாந் தீரப் பரஞ்சோதி நீகுருவாய்வந்த வடிவை மறவேன் பராபரமே. (பொ - ள்) சிவபெருஞ்சுடரே! அடியேனுடைய பிறவிப் பிணிப்பு முற்றும் அற்றுநீங்கத் தேவரீர் சிவகுருவின் வடிவாய் எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளினை; அவ்வருட்குருவடிவினை அடியேன் எந்நாளிலும் மறக்கமாட்டேன்.(326) தானந்த மான சகச நிருவிகற்பஆனந்த நிட்டைஅருள் ஐயா பராபரமே. (பொ - ள்) தனக்குமேல் ஒன்றுமில்லாத தன்னளவிலேயே முடிவுற்ற இயல்பான பேறுபாடில்லாத பேரின்பப் பெருநிட்டை நிலையினை அருள்புரிய வேண்டும் முதல்வனே.(327) அல்லலெல்லாந் தீரஎனக் கானந்த மாகவொருசொல்லைஎன்பால் வைத்ததையென் சொல்வேன் பராபரமே. (பொ - ள்) உலகியற் றுன்பம் முற்றும் அடியேனுக்கு அற்று ஒழியும்படி பேரின்பப்பெரு நிலையாகச் செம்பொருட்டுணிவின் பெருமொழியை எளியேன்பால் வைத்தருளிய நின் நிலையினை எவ்வாறு எடுத்தேத்திப் புகழ்வேன்?(328) சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்றவுன்னைத்தந்தவுனக் கென்னையும்நான் தந்தேன் பராபரமே. (பொ - ள்) அடியேனுடைய மனமயக்கந் தீரும்படி மீநுண்ணறிவு வடிவாய் எளியேன் உள்ளத்தின்கண் மிக்கோங்கி எழுந்தருளி நின்று நின்திருவடியினைத் தந்தருளிய உனக்கு நோன்மைப் பருமை யறிவாம் எளியேனைத் தந்துநின் திருவடிக்கண் ஒப்புவித்தேன். மீநுண்ணறிவு - அதிசூக்கும2 சித்து. நோன்மை பருமையறிவு - தூல சித்து.(329) மைகாட்டு மாயை மயக்கமற நீகுருவாய்க்கைகாட்ட வுங்கனவு கண்டேன் பராபரமே. (பொ - ள்) ஆணவச்சார்பாம் மாயை மயக்கத்தைச் செய்யும் தன்மைத்து. அம் மயக்கம் அற்றொழியுமாறு தேவரீர் சிவகுருவாய் எழுந்தருளி வந்து அறிவுப் பொறித்திருக்கையினை அடியேன் கனவின்கண் காட்டியருளியமை கண்டேன். 1. 'அன்றே என்றன்' - 8. குழைத்தபத்து - 7. 2. 'அசித்தரு', சிவஞானசித்தியார், 4 - 2 - 15. " 'தந்ததுன்', 8. கோயிற்றிருப்பதிகம், 10.
பந்தமெலாந் தீரப் பரஞ்சோதி நீகுருவாய்வந்த வடிவை மறவேன் பராபரமே.
தானந்த மான சகச நிருவிகற்பஆனந்த நிட்டைஅருள் ஐயா பராபரமே.
அல்லலெல்லாந் தீரஎனக் கானந்த மாகவொருசொல்லைஎன்பால் வைத்ததையென் சொல்வேன் பராபரமே.
சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்றவுன்னைத்தந்தவுனக் கென்னையும்நான் தந்தேன் பராபரமே.
மைகாட்டு மாயை மயக்கமற நீகுருவாய்க்கைகாட்ட வுங்கனவு கண்டேன் பராபரமே.