பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

607
வலியவந்தணைவர், இவர் தன்மை இருந்தவா றென்னே? (வஞ்சகமன்று, அதுவே செவ்விமுறையாம்.)

(33)
 
நீர்க்குமிழி போன்றவுடல் நிற்கையிலே சாசுவதஞ்
சேர்க்கஅறி யாமல் திகைப்பேனோ பைங்கிளியே.
     (பொ - ள்) நீர்க்குமிழி போன்று இவ்வுடல் நிலைநில்லாத தன்மையுடையது. எனினும் இவ்வுடலில் தங்கியிருக்கும்போதே என்றும் பொன்றாது நிலைத்திருப்பதாகிய திருவடிப் பேரின்பத்தினைத் திருவருளால் உணர்ந்தெய்தாது திகைப்பேனோ?

(34)
 
நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின்வே றென்றணையார்
வஞ்சகத்தார் அல்லரவர் மார்க்கமென்னோ பைங்கிளியே.
     (பொ - ள்) அடியேன் நெஞ்சகத்திலே நீங்காது குடிகொண்டிருக்கும் தலைவர், வேறாக இருக்கின்றார் என்றெண்ணி நினைப்பேனாயின் அவரும் எளியேனை வேறாக எண்ணித் தழுவுதல் செய்யார். ஆயினும் வஞ்சகரல்லர், அவர் திருவடியை எய்தும் வழிதான் யாதோ சொல்வாயாக.

(35)
 
பன்முத் திரைச்சமயம் பாழ்படக்கல் லாலடிவாழ்
சின்முத் திரைஅரசைச் சேர்வேனோ பைங்கிளியே.
     (பொ - ள்) (முக்கூற்றுப் புறச்சமயத்தாரனைவரும் தங்கள் தங்கள் கொள்கைகளைத் தாங்கள் தாங்கள் வழிபடும் தெய்வத் திருப்பமடிமங்களின் கைப்பொறியாகிய விரல்முத்திரையின் வைத்துக் காட்டுகின்றனர். அவ் வனைத்தும் முடிந்த முடிபாகிய பேரின்பப் பெருவாழ்வின் அறிவடையாள முத்திரையாகா. அதனால்) பல வகையான சமய முத்திரைகளனைத்தும் நிலைநில்லாது ஒடுங்க, கல்லாலின் வீற்றிருந்தருளும் தென்முகக்கடவுளாகிய ஆலமர் செல்வன் திருக்கைப்பொறியாகிய அறிவடையாள முத்திரையை அளித்தருளும் வேந்தரை அடியேன் அடைவேனோ?

(36)
 
பச்சைகண்ட நாட்டிற் பறக்கும்உனைப் போற்பறந்தேன்
இச்சைஎல்லாம் அண்ணற் கியம்பிவா பைங்கிளியே.
     (பொ - ள்) பசுமை நிறைந்த மரங்களடர்ந்த சோலைகளையுடைய நாடுகளை நாடிக் களிப்புடன் பறந்து செல்லுகின்ற பைங்கிளியே, அடியேனும் உன்னைப்போல் எளியேன் தலைவரை அணையக் காதன்மிகுதியால் பறந்து செல்ல முயல்கின்றேன். இவ்வுண்மையினை ஏழையேன் விழையும் தலைவருக்குக் கிளியே எடுத்தியம்பி வருவாயாக.

(37)
 
பாசபந்தஞ் செய்ததுன்பம் பாராமல் எம்மிறைவர்
ஆசைதந்த துன்பமதற் காற்றேன்நான் பைங்கிளியே.
     (பொ - ள்) ஆணவ முதலிய கட்டுக்களால் ஏற்பட்ட துன்பங்களைச் சிறிதும் பொருட்படுத்தாது, அடியேன் தலைவர்மேல் அளவிறந்த