பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

632
திருச்சிற்றம்பலம் எனப்படும் திருவருள் வெளியாம் சீருலகில் சேர்ந்துறைவ தெந்நாளோ?

(1)
பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்
மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) (காரண மாயையினின்று திருவருளால் தோன்றி நிற்கும் இவ்வுலகம் உண்மையான் நோக்கின் ஒடுங்குத் தன்மைத்து; அதனால்) தோற்றம் ஒடுக்கமுடைய இவ்வுலகம் பொய்க்காட்சியுடைய தெனப்படும்; (பொய் ஈண்டு நிலையாமை மேற்று,) நிலையிலா இவ்வுலகத்தை விட்டு நீங்கி. நிலைபேறுடைய மெய்க்காட்சி யெனப்படும் திருவருளுலகத்தைச் சேர்ந்துய்வ தெந்நாளோ?

(2)
ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்த
தீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) முதலும் முடிவுங் காணவொண்ணாது எங்கும்பரந்து நிற்கின்ற வானம் போன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் திருவருட் பெருங்கடலைச் சேருநா ளெந்நாளோ?

(3)
எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்
வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) பெருந்திசை நான்கும், கோணத்திசை நான்கும் மேல் கீழ் இரண்டும் ஆகப் பத்துத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் திருச்சிற்றம்பலமென்னும் திருவருள் வெறு வெளியில் காணப்படும் சிவப் பேரின்பப் பேராறு விண்ணாறு எனப்படும். அவ்வியாற்றில் திருவருளால் டம்பு தோய்வது எந்நாளோ? தோய்தல் - முழுகுதல்.

(4)
சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்
மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) நுண்ணிய இடமென்று மறைகளால் முழங்கப்படும் இடம் மேலான இடம். அவ்விடத்துக் காணப்படும் திருவருள் மலையினை 1 மேவுநாளெந்நாளோ? சூதானம் - நுண்ணிய இடம்.

(5)
வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்
வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) மலத்தால் வெப்பமும் மாயையினால் மயக்கமும் கொண்டு துன்புறுகின்ற துன்பம் நீங்கத் தண்ணளியோடு வந்து பொழிகின்ற திருவருண் மழையினைக் காண்பது எந்நாளோ?

(6)
சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்
பூரணதே யத்திற் பொருந்துநாள் எந்நாளோ.
 1. 
'அருணனிந்திரன்.' 8. திருப்பள்ளியெழுச்சி, 2.