பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

633
    (பொ - ள்.) பூதத் தொடர்பாய் ஒளி தந்துகொண்டிருக்கும் ஞாயிறுந் திங்களும் விளங்குவதற்கிடமாகிய தோன்றும் நிலையில்லாத மேலான திருவருட் பேரொளி திகழ்கின்ற குறைவிலா நிறைவான நிலைக்களத்தினைப் பொருந்துநாள் எந்நாளோ?

(7)
கன்றுமன வெப்பக் கலக்கமெலாந் தீரஅருள்
தென்றல்வந்து வீசுவெளி சேருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) அறியாமையின்கண் புழுங்குகின்ற மனவெப்பத்தால் உண்டாகின்ற கலக்க முழுவதும் ஒழியும்படி, திருவருளாகிய தென்றற்காற்று என்றும் வீசுகின்ற திருச்சிற்றம்பலம் எனப்படும் அறிவாற்றற் பெருவெளியை அணையும்நாள் எந்நாளோ?

(8)
கட்டுநமன் செங்கோல் கடாவடிக்குங் கோலாக
வெட்ட வெளிப்பொருளை மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) (இருவினைக்கு ஈடாக நமன் உடம்பினின்றும் உயிர்களைப் பிரித்துக்கொண்டு செல்லுங்கால், ஆசையென்னும் வலிய கயிற்றால் கட்டிக் கைக்கோலால் அடித்து அவ்வுயிர்களைக் கொண்டு செல்வன். ஆனால், திருவடிசேரும் உயிர்களிடம் அவனுக்கு எவ்வகையான செயலுமின்று. அதனால்,) பாசக் கயிற்றால் உயிர்களைக் கட்டியிழுத்துச் செல்லுகின்ற நமன் கையிலுள்ள செங்கோல் அவன் ஏறிச் செல்லும் எருமைக் கடாவை அடித்துச் செலுத்தும் மாட்டுக் கோலாக மாறும்படி திருவருளால் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றுகின்ற 1 கூத்தப் பெருமானைச் சேருநா ளெந்நாளோ? வெட்டவெளி - திருச்சிற்றம்பலம்; சிதாகாயம்.

(9)
சாலக் கபாடத் தடைதீர எம்பெருமான்
ஓலக்க மண்டபத்துள் ஓடுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மிகுந்த மாயாகாரியத் தடையாகிய கதவு நீங்க எமக்குப் பெருமானாகிய சிவன் வீற்றிருந்தருளும் திருவருண் மயமான திருஓலக்க மண்டபத்தே அடியேன் விரைந்து சென்று வாழும் நாள் எந்நாளோ?

(10)
விண்ணவன்தா ளென்னும் விரிநிலா மண்டபத்தில்
தண்ணீர் அருந்தித் தளர்வொழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) சிவபெருமானின் திருவடித் தாமரையென்னும் அருள்விரிந்த நீங்காக் குளிர்ச்சி பொருந்திய பெரிய மண்டபத்தில் திருவருட் பெரும்பேறாம் தண்ணீர் பருகிப் பிறவிப் பெருந்தளர்ச்சி யொழிவ தெந்நாளோ?

(11)
வெய்யபுவி பார்த்து விழித்திருந்த அல்லலறத்
துய்ய அருளில் துயிலுநாள் எந்நாளோ.
 1. 
'பிடிப்பதுமக்கெனை.' குமரகுருபரர், சிதம்பரமும்மணி, 16.