பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

638
எவ்வாறிங் குற்றுணர்ந்தார் யாவர் அவர்தமக்கே
அவ்வாறாய் நின்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) நின் திருவடியினை இங்குள்ளார் எவ்வகையாக உற்றுணர்ந்தார்; அவரவர்கட்கு அவரவர் நினைந்தவாறே தோன்றியருளுவ தாகிய மெய்ப்பொருளாம் சிவபெருமானின் திருவடிக்கு மாறா அன்பு வைப்ப தெந்நாளோ?

(17)
பெண்ணாண் அலியெனவும் பேசாமல் என்அறிவின்
கண்ணூடே நின்றஒன்றைக் காணுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) பெண்ணெனவும் ஆண் எனவும், இவ்விரண்டும் அல்லாத அலியெனவும் கூறவொண்ணாதபடி யுள்ள சிவபெருமான் அடியேன் உணர்வின்கண் உணர்வாய் நின்றருளினன்; அவன் திருவடிக்கு அன்புவைப்ப தெந்நாளோ?

(18)
நினைப்பும் மறப்பும்அற நின்றபரஞ் சோதி
தனைப்புலமா என்னறிவிற் சந்திப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) தம்முனைப்பறிவால் நினைப்பும், ஆணவத்தடையால் ஏற்படும் மறப்பும் அறவே நீங்கின இடத்து மிக்கோங்கி நின்றருளும் மேலாம் அறிவுப்பேரொளி தன்னை (சிவபெருமானை) வெளியாக அடியேன் அறிவின்கண்ணே சேர்ந்து தொழுவ தெந்நாளோ?

(19)
பேச்சுமூச் சில்லாத பேரின்ப வெள்ளமுற்று
நீச்சுநிலை காணாமல் நிற்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) செவியோசை தோன்றப் பேசுதற்கும் உயிர்முச்சினைவிட்டு வாங்குதற்கும் இடனின்றித் திருவடிப் பேரின்பப் பெருங்கடலுள் காணப்படும் வற்றாப் பெரு வெள்ளத்தே திளைத்து ஆழ நீள அகலம் அளவிடப் படாமையால் நீந்தவொண்ணாதபடி நிலைத்து நிற்குநாள் எந்நாளோ?

(1)
சித்தந் தெளிந்தோர் தெளிவில் தெளிவான
சுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மனவோட்ட மொடுங்கித் தெளிந்த சிவனடியார் தெளிவுணர்வின்கண் தெளிவாகிய தூய பேரின்பப் பெருங்கடலுட் பெயராது மூழ்குநாள் எந்நாளோ?

(2)
சிற்றின்பம் உண்டூழ் சிதையஅனந் தங்கடல்போல்
முற்றின்ப வெள்ளம்எமை மூடுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) இருவினைக்கீடாக வரும் இன்பத் துன்பங்களுள் சிற்றின்பத்தை நுகர்தற்கேதுவாகிய உலக ஆசையினை உண்டாக்கும்