"என்அறிவூடு . . . உயிர்கள்" - (இத்தகைய பொல்லா இழிகுணம் பலவுடைய) எளியேன் அறிவினூடு (என்றும் ஒரு படித்தாய்த் தோற்ற மாற்றமாகிய பிறப்பு இறப்புகளின்றி நின்று நிலவும்) மெய்ப் பொருளாகிய நீ வீற்றிருந்தருள முறைமையில்லை யென்று கூறியருள் வாயாகில், நீ எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாய் என்பதற்கும், அதுவே நின் பெருந்தண்ணளிப் பெற்றிசேர் பேரியல்பு என்பதற்கும் மாறாகிவிடும். அங்ஙனம் விரித்துரைக்கவும் வழியில்லை. இவற்றிற்கு வேறாகவும் உண்டாகுமோ? பண்டே புல்லிய ஆணவமலம் என்னும் பாம்புக் கயிற்றால் கட்டுண்டு செயலற்றுக்கிடக்கும் ஆருயிர்களின்;
"மூர்ச்சை . . . . . . . மேருவே" - மூர்ச்சித்துக் கிடக்கின்ற துன்பநிலை வல்விரைவில் நீங்க, (கழிபேரிரக்கத்தால்) வலியவந்தருளும் நஞ்சினை நீக்கும் மருந்தாகிய பொருளே! வீடுபேறென்னும் நீடுலகின் நடுவில் செவ்விதாகிய நிலைமையுடன் வளர்ந்தோங்கும் மிகவுஞ்சிறந்த குணமாகிய மேரு என்னும் பொன்மலையே!
"சிரகிரி . . . குருவே"
(வி - ம்.) ஒளவியம் - அழுக்காறு. லோபம் - இவறன்மை, ஆசா பிசாசம் - ஆசைப்பேய். பாசம் - கயிறு. சஞ்சீவி - நஞ்சகற்றுமருந்து. திவ்விய - சிறந்த.
ஆருயிர்களின்பால் மலச்சார்பில் மருள் நிறைந்த பல தீயகுணங்கள் நிறைந்திருப்பினும் அவற்றிற்கு மாறாக அவற்றைப் போக்கும் ஆண்டவனுடைய நல்லகுணங்கள் பலவும் உடனிருக்க வேண்டியது இன்றியமையாததாயிற்று. இருள் நிறைவில் தங்குதற்குரிய இடத்தில் மாசுங் குப்பையும் மலிந்திருப்பதெனினும் சுடரொளி தோன்றி இருளையடக்குவதுடன் மாசகற்றவும் துணைநிற்கவேண்டிய இன்றியமையாமை இதற்கொப்பாகும். அதனால் ஆருயிருடன் பேருயிராகிய இறைவன் உடன் நிற்க வேண்டியது வாய்வதேயாம். மேலும் இறைவன் வானம் போல் யாண்டும் என்றும் நீக்கமின்றிக் கலந்திருப்பவன் ஆதலின் அவன் தீங்கினைக் கண்டு நீங்கி நிற்பதற்கு இடமு மில்லை. இவ்வுண்மை வருமாறுணர்க:
| "சென்றிவன்றான் ஒன்றில் சிவபூரணம் 1சிதையும் |
| அன்றவன்றான் ஒன்றுமெனில் அன்னியமாம் - இன்றிரண்டும் |
| அற்றநிலை யேதென்னில் ஆதித்தன் அந்தன்விழிக் |
| குற்றமற நின்றதுபோற் கொள்." |
| - உண்மைவிளக்கம், 48. |
(3)
ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள் | அசரசர பேதமான | யாவையும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை | யாதிநூ லையும்வகுத்துச் |
1. | இருநிலனாய்த். 6. 94 - 1. |