பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

65

சைவமுத லாம்அளவில் சமயமும் வகுத்துமேற்
    சமயங் கடந்தமோன
  சமரசம் வகுத்தநீ யுன்னையான் அணுகவுந்
    தண்ணருள் வகுக்கஇலையோ
பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே
    பொய்யிலா மெய்யரறிவில்
  போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்
    போக்குவர வற்றபொருளே
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்.) "ஐவகை . . . . . . வகுத்தநீ" - ஐவகையாகச் சொல்லப்படும் (நுண்ணிய நிலையாகிய) பூதங்களையும் (பருமைநிலையாகிய) பூதகாரியங்கள் எனப்படும் பௌதிகங்களையும் இவைமுதலாக விளங்குகின்ற உலகங்களைத் திருக்குறிப் (சங்கற்பம்) பாகிய கண்ணுதலால் படைத்தருளி, அவ்வுலகத்தின்கண் இயங்குதிணை (சரம்) உயிர்களையும் நிலைத்திணை (அசரம்) உயிர்களையும் அவ்வவற்றிற்குரிய உடம்புகளோடு கூடிவருமாறு செய்தருளி, (அவ்வுடலகத்து அவ்வப்பிறப்பிற்குரிய அறிவு விளங்குமாறு புறக்கருவி அகக்கருவிகளின் விளக்கத்தை யமைத்து அவற்றால்) நல்லறிவையும் வகுத்தருளி, (அவ்வறிவு விளக்கத்திற்கு உறுதுணையாகிய) மறைமுறைகள் என்று சொல்லப்படும் வேதாகம முதலாகிய நூல்களையும் அமைத்தருளி, அந்நூல்களால் (ஆருயிர்களின் தகுதிக்கு ஏற்பப் படிமுறையான் விளங்கிப் பள்ளி வகுப்புப் போல் மேன்மேலாகக் கைக்கொள்ளப்படும்) சைவமுதலாகச் சொல்லப்படும் அளவில்லாத நெறிகளையும் வகுத்தருளி, அவற்றிற்கு மேலாக நெறிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாகிய வாய்வாளாமை (மோனம் என்னும் பொதுமையும் வகுத்தருளிய நீ;

     "உன்னைநா . . . . . . அறிவில்" - உன்னை அடியேன் (அன்புடன்) அணுகி (உய்யுமாறு) அந்தண்மை வாய்ந்த திருவருள் வகுத்தருளவில்லையோ? (மீட்டும் மீட்டும் பிறப்பினைத் தந்து பேதுறுத்திச் சிறைப் படுத்தும்) பொய் முதலிய தீமைகளே நாளும் பெருகி வளர்ந்து கொண்டிருக்கும் மனமுடைய தீயவர்கள் கண்டுகொள்ள முடியாதபடி மறைந்துநின்றருளும் பேரறிவுப் பெரும்பிழம்பே! (அத்தகைய) தீமைகள் சிறிதும் இல்லாத திருவருள் துணையால் மெய்யுணர்வு கைவரப்பெற்றுத் திகழும் அவ்வடியவர் தம் தூய அறிவில்;

     "போதபரி . . . முதலே" - (எங்கும் நிலைபெற்று விளங்கும்) முழுநிறைவாகிய மெய்யுணர்வாய்த் திகழ்ந்து, எல்லையற்ற பெருவடிவாய் யாண்டும் (உருவுடைப் பொருள்போல்) போக்கும் வரவும் உள்ள