தென்னும் இயல்பு இல்லதாய் மாறாது திகழ்ந்துகொண்டிருக்கும் (பெரும் பெயர்க்கிளவயாகிய) பெரும் பொருளே! (பண்டைச் செந்தமிழ்மறைகளே) தெய்வ மறையின் திருமுடியாகிய ஓங்காரத்தின் உட்பொருளே! முடிந்த முடிவெனப்படும் செம்பொருட்டுணிவின் விழுமிய முழுமுதலே!
"சிரகிரி.....குருவே"
(வி - ம்) சரம் - நிலைத்திணைப் பொருள்; அசையாதது. சரம் - இயங்குதிணைப் பொருள்; அசையும் பொருள். சமயம் - நெறி. சமரசம் - பொதுமை. பரிபூரணம் - முழுநிறைவு. அகண்டிதம் - வரையறுக்கப்படாதது; எல்லையற்றது. சித்தாந்தம் - முடிந்தமுடிபு. முத்தி - பேறு.
உலகம் வினைமுதற்காரணம் எனப்படும் நிமித்தகாரணனால் ஆருயிர்கள் மலச்சிறையினின்றும் விடுபட்டுத் திருவடி நலச்சிறப்பினை எய்துதற்பொருட்டுப் படைக்கப்பட்டது. இவ்வுலகிற்று முதற்காரணம் மாயை. துணைக்காரணம் திருவருளாற்றல், இவ்வுண்மை வருமாறுணர்க :
| "காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம் |
| பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநிமித்தம் |
| தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தியாக |
| ஆரியன் குலால னாய்நின்று ஆக்குவன் அகில மெல்லாம்." |
| ஆரியன் - சிவபெருமான்.-சிவஞானசித்தியார் 1. 1 - 18. |
பொன்னார் மேனியனாகிய சிவபெருமான் பொய்யர் நெஞ்சிற் புகாமையும், மெய்யர் நெஞ்சில் மிக்கோங்கிப் புகுதலுமாகிய ஈரியல்புடையன். இவ்வுண்மை வருமாறுணர்க :
| "மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு |
| விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும் |
| பொய்யானைப் புறங்காட்டில் ஆட லானைப் |
| பொன்பொதிந்த சடையானைப் பொடிகொள்பூதிப் |
| பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப் |
| பரந்தானைப் பவளமால் வரைபோன் மேனிச் |
| செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
| சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே." |
| - 6. 66. - 5. |
மறைகளின் தெய்வத்தன்மையும் அதன் முடிவாகிய ஓங்காரத்தின் பெருமையும் விழுமிய முழுமுதலாகிய நும்மால் ஏற்படுவனவேயாம். வேதத்திலும் ஆகமத்திலும் தெளியக்காண்டலை விடச் செந்தமிழ் மெய்ந்நூல்களில் அரியபெரிய உண்மைப்பொருள்களை எண்மையில்