செவ்வியாகிய பரிபக்குவம் எய்தியவிடத்து அத் திரோதான சத்தியே பராசத்தியாக நின்று உச்சிக் கதிர்போல் உலகியற் பற்றறச் செய்து தன் வண்ணமாக நிற்கச் செய்யும். இவ்வுண்மை வருமாறு :
| "தனக்கு நிழல்இன்றாம் ஒளிகவரும் தம்ப |
| மெனக்கவர நில்லா இருள்." |
| - திருவருட்பயன், 67. |
(12)
இம்மா நிலத்தில் இருந்தபடி யேயிருந்து | சும்மா அருளைத் தொடருநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) இந் நிலவுலகத்தின்கண்ணே திருவருள் நினைவால் உலகப் பொருள்களைப் பற்றிய நாட்டம் வந்து மோதாமல் தன் முனைப்புச் செயலற்று மவுன நிலையில் இருந்தபடியே இருந்து திருவருளைப் பின்தொடருநாள் எந்நாளோ?
(13)
தானவனாந் தன்மைஎய்தித் தண்டமென அண்டமெங்கும் | ஞான மதயானை நடத்துநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) திருவருளால் (ஆருயிர்) தான் முதல்வனாய1 தன்மையை அடைந்து உலகமெல்லாம் செல்லும் வழியாக மூதறி வாகிய மும்மத யானையை அடியேன் நடத்துநாள் எந்நாளோ? தண்டம் - யானை செல்லும்வழி.
(14)
ஒன்றிரண்டு மில்லதுவாய் ஒன்றிரண்டு முள்ளதுவாய் | நின்ற சமத்துநிலை நேர்பெறுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) உலகியல் எனப்படும் நிலையில்லாத நோக்காம் பொது உணர்வில் சிவனும் ஆவியும் ஒன்று இரண்டு என்று வரையறுத்துக் கூற வொண்ணாதனவாகி, இரண்டறக் கலந்து இன்பநுகரும் நுண்ணாணர் வாம் சிறப்புணர்வில் ஒன்றும் இரண்டும் உள்ளதாகி ஒப்ப நிற்கும் உயர்வற உயர்ந்த பெருநிலையினை நேராகப் பெருநாள் எந்நாளோ?
(15)
பாசம் அகலாமல் பதியில் கலவாமல் | மாசில் சமததுமுத்தி வாய்க்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) தொன்மையே உள்ள ஆணவமலம் அழிந்துபடாமல் அவ்வாணவத்தின் ஆற்றல்மட்டும் ஒடுங்கிப் பதியாகிய சிவபெருமானுடன் ஆருயிர் அழிந்துபடாமல் இரண்டறப் புணர்ந்து குற்றமில்லாத பரப்பு முழுதுடனடக்கமாம் சிறப்புமாய் ஒப்ப நிற்கும் பேரின்பப் பெரும்பேறு வாய்க்குநாள் எந்நாளோ?
(16)
சிற்றறிவு மெள்ளச் சிதைந்தெம்மான் பேரறிவை | உற்றறியா வண்ணமறிந் தோங்குநாள் எந்நாளோ. |
1. | 'அவனில்,' திருவுந்தியார், 39. |
2. | " 'அவனிவனாய்,' திருக்களிற்றுகப்படியார், 92. |