தவறினும் நிலத்தே வீழ்ந்து மாள்வது போன்று இவர்களும் சிறிது தவறினும் கடுநரகெய்துவர். ஆனால் ஞான நெறியினிற் சரியை முதலிய நாற்படியுள் மூன்றுபடியுமுற்றி நாலாவது படியாகிய ஞானத்தில் நிற்போர் நழுவின் மூன்றாவதுபடியில் வீழ்வர். இந்நான்கிற்கும் உரிய பேற்றுநிலை வருமாறு : சரியை - சாலோகம், கிரியை - சாமீபம், யோகம் - சாரூபம், ஞானம் - சாயுச்சியம்.
(2)
பன்மார்க்க மான பலஅடிபட் டேனுமொரு | சொன்மார்க்கங் கண்டு துலங்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்) முக்கூற்றுப் புறச் சமயங்களான பல நெறிகளிலும் போய் உழன்று மொத்துண்டேன். அப்படி அடிபட்ட யான் சித்தாந்த ஒரு மொழியாகிய சிவ என்னும் சொன்னெறி கண்டு விளங்குநாள் எந்நாளோ?
(3)
அத்துவித மென்ற அந்நியச்சொற் கண்டுணர்ந்து | சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ. |
(பொ - ள்) இரண்டிணை ஒன்றென்னும் உண்மையே அத்துவிதம் என உணராது ஒன்றே அத்துவிதம் என்னும் வேற்று நெறியினர் சொல்லைக் கண்டகன்று தூயசிவத்தை யடையுநாள் எந்நாளோ?
(4)
கேட்டல்முதல் நான்காலே கேடிலா நாற்பதமும் | வாட்டமற எனக்கு வாய்க்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்) ஞான நூல்தனைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டை கூடுதல் என்னும் நான்கும் பயில்வதால் என்றும் பொன்றாத சாலோகம் சாமீபம், சாரூபம், சாயுச்சியம் முதலிய நான்கு நிலைகளும் துன்பமற அடியேனுக்குக் கிடைக்குநாள் எந்நாளோ?
(5)
என்னதுயான் என்பதற எவ்விடமும் என்னாசான் | சந்நித்யாக் கண்டுநிட்டை சாதிப்ப தெந்நாளோ. |
(பொ - ள்) என்னுடையது என்னும் புறப்பற்றும் யான் என்னும் அகப்பற்றும் நீங்க எல்லா இடங்களிலும் எளியேனை ஆட்கொண்டருளிய மவுன குருவின் திருமுன்பாகக் கண்டு நிட்டைகூடி நிற்குநாள் எந்நாளோ? சந்நிதி - திருமுன்பு.
(6)
நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால் | தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ. |
(பொ - ள்) ஏகான்மவாதக் கொள்கைப்படி நானே பிரமம் என்று கூறிக்கொண்டால் நான் என்னும் அகங்காரமே தோன்றும். அது பசுஞானம்1 என்றே சொல்லப்படும்; எல்லாம் ஒன்றாகத் திருவருளால்
1. | 'வேதசாத்.' சிவஞானசித்தியார், 9. 1 - 1. |