| | தில்லைப் பொதுவில் திருநடத் தெய்வம் |
| | வாதவூர் எந்தையை வரிசையாய் விழுங்கும் |
| | போதவூர் மேவுகர்ப் பூர விளக்குச் |
| | சுகரை அகண்டத் தூவெளி எல்லாந் |
| 30 | திகழவே காட்டுஞ் சின்மய சாட்சி |
| | செழுந்தமிழ் அப்பரைச் சிவலிங்க மாகி |
| | விழுங்கிய ஞான வித்தக வேழம் |
| | எழில்தரு பட்டினத் திறைவரை யென்றும் |
| | அழிவிலா இலிங்க மாக்கிய அநாதி |
| 35 | சாந்த பூமி தண்ணருள் வெள்ளம் |
| | ஆர்ந்த நீழ லசையாக் ககனம் |
| | பரவுவார் நெஞ்சிற் பரவிய மாட்சி |
| | இரவுபக லற்ற ஏகாந்தக் காட்சி |
| | ஆட்சிபோ லிருக்கும் அகிலந் தனக்குச் |
| 40 | சாட்சியா யிருக்குந் தாரகத் தனிமுதல் |
| | ஆணும் பெண்ணும் அலியுமல் லாததோர் |
| | தாணுவாய் நின்ற சத்தாந் தனிச்சுடர் |
| | எள்ளும் எண்ணெயும் எப்படி அப்படி |
| | உள்ளும் புறம்பும் உலாவிய ஒருபொருள் |
| 45 | அளவிலா மதந்தொறும் அவரவர் பொருளென |
| | உளநிறைந் திருக்கும் ஒருபொற் பணிதி |
| | துள்ளு மனப்போய் துடிக்கத் தறிக்கக் |
| | கொள்ளு மோனவாள் கொடுத்திடு மரசு |
| | பெரிய பேறு பேசாப் பெருமை |
| 50 | அரிய உரிமை அளவிலா அளவு |
| | துரிய நிறைவு தோன்றா அதீதம் |
| | விரியுநல் லன்பு விளைத்திடும் விளைவு |
| | தீராப் பிணியாஞ் செனன மறுக்க |
| | வாரா வரவாய் வந்தசஞ் சீவி |
| 55 | ஆலைக் கரும்புபா கமுதக் கட்டிநீள் |
| | சோலைக் கனிபலாச் சுளைகத லிக்கனி |
| | பாங்குறு மாங்கனி பால்தேன் சருக்கரை |
| | ஓங்குகற் கண்டுசேர்த் தொன்றாய்க் கூட்டி |
| | அருந்திய ரசமென அறிஞர் சமாதியில் |