| பதம்பர வெனப்பகர் பரமமெய்ஞ் ஞானி |
| முத்திபஞ் சாக்கர முறைமையி லயிக்கியஞ் |
| சத்திய மிதுவெனச் சார்ந்தவர்க் குரைத்தோன் |
| அஞ்செழுத் துள்ளே அனைத்தையுங் காட்டிஎன் |
200 | நெஞ்சழுத் தியகுரு நீதி மாதவன் |
| எல்லா நிறைந்த இறைவன் செயலெனக் |
| கல்லா எனக்குங் கருணைசெய் கடவுள் |
| குருவரு ளாலே கூடுவ தல்லால் |
| திருவரு ளுறாதெனத் தெரிந்திட உரைத்தோன் |
205 | குருவுரு வருளெனக் கொண்டபின் குறையாப் |
| பொருள்மய மாமெனப் புகன்றிடு போதன் |
| எந்தமூர்த் திகளையு மெழிற்குரு வடிவெனச் |
| சிந்தையில் தியக்கறத் தேர்ந்தவர்க் குரைத்தோன் |
| சதாசிவ மென்றபேர் தான்படைத் ததுதான் |
210 | எதாவதே பொருளென் றேடுத்தெடுத் துரைத்தான் |
| கல்லானை கன்னல் கவர்ந்திடச் செய்தவன் |
| எல்லாம் வல்லசித் தெம்மிறை என்றோன் |
| எவ்வுயிர் தோறும் இறைமே வியதிறஞ் |
| செவ்விய பிரம்படி செப்பிடு மென்றோன் |
215 | எவ்வண மெவரெவ ரிசைத்தன ரவரவர்க் |
| கவ்வண மாவனெம் மானென அறைந்தோன் |
| ஒருபாண னுக்கே யொருசிவ னாட்படின் |
| வருமடி யார்திறம் வழுத்தொணா தென்றோன் |
| சிவனடி யாரைச் சிவனெனக் காண்பவன் |
220 | எவனவன் சிவனே என்றெடுத் துரைத்தோன் |
| விருப்பு வெறுப்பினை வேரறப் பறித்துக் |
| கருப்புகா தென்னைக் காத்தருள் சேய்தோன் |
| இருசொல் லுரையா தியானின்ப மெய்த |
| ஒருசொல் லுரைத்த உயர்குண பூதரன் |
225 | அத்துவா மார்க்கம் ஆறையு மகற்றித் |
| தத்துவா தீதத் தன்மையைத் தந்தோன் |
| திருமகள் மருவிய திகழ்வா மறைசையில் |
| வருமுணர் வாளன் மருளிலா மனத்தான் |