பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

700
 
தண்ணமர் மொழியுந் தழுதழுத் திடவே
 
உள்ளும் புறம்பும் ஒருமித் துருகி
 
வெள்ள நீர்போல் விழிநீர் பெருக்கிக்
 165
கன்று பசுவைக் கருதிக் கதறிச்
 
சென்றுசென் றோடித் திகைப்பது போல
 
என்புநெக் குடைய இருகரங் குவித்துப்
 
புன்புலால் யாக்கை பொருந்தா தினிஎன
 
உணர்ந்துணர்ந் தன்பா யுவகைமேற் கொண்டினிக்
 170
கணம்பிரி யேனெனக் கருதியே குறித்துத்
 
திருவுரு வெல்லாந் திருநீ றிலங்க
 
இருகர நளினம் இயன்முடி குவித்துப்
 
பூரண சந்திரன் போலொளி காட்டுங்
 
காரண வதனங் கவின்குறு வெயர்வுற
 175
இளநிலா வெனவே இலங்கிய சிறுநகை
 
தளதள வென்னத் தயங்கி எழில்பெற
 
இத்தன்மை எல்லா மிசைந்து மிவனருட்
 
சித்தெனச் சிவகதி தேர்ந்தவ ருரைப்பப்
 
பாத்திர மாடப் பரிவுட னாடிச்
 180
சாத்திரங் காட்டித் தயவுசெய் தருளும்
 
வல்லவ னெனவே மன்னுயிர்க் காக
 
எல்லையி லன்ப னிவனென விளங்கி
 
ஈன வுலகத் தியற்கைபொய் யென்றே
 
ஞானநூல் மெய்யென நவின்றினி திரங்கிக்
 185
கேவல சகலங் கீழ்ப்பட மேலாய்
 
மேவருஞ் சுத்த மெய்யினை நல்க
 
அருளே உருவுகொண் டவனியில் வந்த
 
பொருளே இவனெனப் பொலிந்திடும் புனிதன்
 
சைவஞ் சிவனுடன் சம்பந்த மென்பது
 190
மெய்வளர் ஞானம் விளக்குமென் றிசைத்தோன்
 
கதிர்விழி யொளியுறக் கலத்தல்சித் தாந்த
 
விதிமுறை யாமென விளம்பிய மேலோன்
 
முடிவினில் ஆகம முறைமையி னுண்மையை
 
அடியரைக் குறித்துரைத் தருளிய அண்ணல்
 195
சிதம்பர நேர்மை திறமா விரைத்திறை