பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

699
 
இராசயோ கத்திறை இராசயோ கத்தான்
 
பொறுமை தெளிவு புனிதவா சாரம்
 130
மறுவிலா வண்மை வாரம் இயற்கை
 
தண்ணமர் சாந்தந் தயங்கிய கீர்த்தி
 
எண்ணெண் கலைபயில் இணையிலாக் கல்வி
 
நல்ல இரக்கம் நடுநிலை சத்தியம்
 
இல்லைஎன் னாமல் எவர்க்குந் தருங்கொடை
 135
நற்குண னெல்லாம் நண்ணிய பெருந்தகை
 
சிற்குண வாரி திருவருட் செல்வன்
 
கரமே லெடுத்துக் கருத்துற வணங்கிப்
 
பரமே யுனக்குப் பரமெனப் பகர்ந்தோன்
 
ஆலடி மேவும் அரசினை அடுத்தே
 140
சீலமெய்ஞ் ஞானந் தெளிந்தன னெனவுஞ்
 
சித்த மவுனி திடசித்த மாக
 
வைத்த நிலையின் வளர்ந்தன னெனவும்
 
மூலன் மரபின் முளைத்த மவுனிதன்
 
பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோன்
 145
வடமொழி இயற்கையின் மகிமையை உணர்ந்து
 
திடமுற முப்பொருள் திறத்தையுந் தெளிந்து
 
கண்டமு தென்னக் கனிரச மென்னத்
 
தண்டமிழ் மாரி தன்னைப் பொழிந்து
 
சித்தியும் முத்தியுஞ் சிறந்தருள் கொழிக்கும்
 150
நித்திய நிரஞ்சன நிராலம்ப நிறைவைப்
 
பாடியும் நாடியும் பணிந்தெழுந் தன்பால்
 
ஆடியும் அரற்றியும் அகங்குழை வெய்தியும்
 
உடலங் குழைய உரோமஞ் சிலிர்ப்ப
 
படபடென் றுள்ளம் பதைத்துப் பதைத்துப்
 155
பாங்குறு நெட்டுயிர்ப் பாகிப் பரதவித்
 
தேங்கி ஏங்கி இரங்கி இரங்கி
 
ஓய்ந்தபம் பரம்போ லொடுங்கியே சிறிதும்
 
ஏய்ந்த விழிக ளிமைப்பது மின்றிச்
 
சோர்ந்து சோர்ந்து துவண்டு துவண்டுமெய்
 160
யார்ந்த அன்போ டவசமுற் றடிக்கடி
 
உள்நடுக் குறவே உருகியே சற்றுத்