| | எல்லாம் பெறுமினென் றியம்பிய தயாநிதி |
| 95 | தருமமுந் தானமுந் தவமும் புரிபவர்க் |
| | குரிமையா யவரோ டுறவு கலப்பவன் |
| | தன்னுயிர் போலத் தரிணியின் மருவிய |
| | மன்னுயி ரனைத்தையும் வளர்த்திடும் வேந்தன் |
| | களவுவஞ் சனைகள்செய் கருமிகள் தமக்குந் |
| 100 | தெளிவுவந் துற அருள் செய்திடுந் திறத்தோன் |
| | தான்பெறும் பேறு சகமெலாம் பெறவே |
| | வான்பெறுங் கருணை வழங்கிய மாரி |
| | தஞ்சமென் றடைந்த தாபதர் தம்மை |
| | அஞ்சலென் றாளும் அறிஞர் சிகாமணி |
| 100 | சீவ கோடிகளுஞ் சித்த கோடிகளும் |
| | யாவரும் புகழ யாவையும் உணர்ந்தோன் |
| | யானென தென்னா இறைவனெம் பெருமான் |
| | தானவ னாகிய தலைவனெங் கோமான் |
| | அருண கிரியார்க் காறு முகன்சொல்லும் |
| 110 | பொருள்நல மல்லது பொருளென மதியான் |
| | பூத முதலாப் பொலிந்திடு நாத |
| | பேதமுங் கடந்த பெருந்தகை மூர்த்தி |
| | மூலா தார முதலா யுள்ள |
| | மேலா தாரமும் வெறுவெளி கண்டவன் |
| 115 | மண்டல மூன்றிலும் மன்னிய உருவிலும் |
| | கண்டவை யத்திலுங் கடவுளாய் நின்றோன் |
| | பகர்சம யந்தொறும் பரமே யிருந்து |
| | சுகநடம் புரியுந் தொழிலெனச் சொன்னோன் |
| | பேத அபேத பேதா பேத |
| 120 | போத மிதுவெனப் புகன்றிடும் புண்ணியன் |
| | அதுநா னெனவே யாற்றிடும் அனுபவஞ் |
| | சதுர்வே தாந்தத் தன்மையென் றுரைத்தோன் |
| | அல்லும் பகலும் அறிவா னோர்க்குச் |
| | சொல்லும் பொருளுஞ் சுமைஎனச் சொன்னோன் |
| 125 | சுதனே குருவாஞ் சுவாமிநா யகற்கெனின் |
| | அதிகமெய்ஞ் ஞான மல்லவோ வென்றோன் |
| | நேசயோ கத்துறு நிருபரெல் லாந்தொழும் |