பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


72


பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி
    பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது பரிந்து
நாகம்மா நதிமதியம் பொதிசடையன் அடிகள்
    நணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே."
- சிவப்பிரகாசம், 20
"பூமன்னு . . . . . . .
 மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்
 தான்அடக்கும் காட்டத் தகுதியும் போல் - ஞானத்தின்
 10. கண்ணை மறைத்த கடியதொழி லாணவத்தால்
 எண்ணுஞ் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும்"
- பாற்றிப்பஃறொடை.
    "தாயினிடத்துண்டான செந்நீரிலே தந்தையினிடத்துண்டான வெண்ணீர் பவழப்பையில் முத்தைவைத்தாற்போலப் படுகிற நாளில் உயிரி (ஆன்மா) யானது உயிர்மூச்சை ஊர்தியாகவும் மனம் வழியாகவும், சிவனுடைய திருஆணையினாலே சென்று வெண்ணீர் செந்நீர்களின் தலையிலே பதித்து இருவினைக் கீடாக மூன்றரைக்கோடி மயிர்த்தொளைகளும், எழுபத்தீராயிரம் நாடியும், பத்துக்காற்றுக்களும், ஒன்பது தொளைகளும் எண்சாண் உடம்பும், ஏழுமுதற் பொருள் (தாதுக்)களும், ஆறு நிலைகளும், ஐந்து பொறியும், நான்கு உட்கருவியும், மூன்று மண்டலமும், இரண்டு வினையும் எனப் பெயர் பெற்று இவற்றை ஒன்றெனப் போர்த்த புறத்தோலுமாக வடிவுகொண்டு, இவ்வடிவு கொண்ட ஆருயிரும் சோற்றுச் சாற்றிற்குள்ள ஊழ்வரையும் தன்னுடைய உடம்பில் கொப்பூழ் வட்டத்தின் மேலேகிடந்து ஆறாந்திங்கள் முதல் கொப்பூழ்கொடியால் தாயினிடத்துள்ள சோற்றுச் சாற்றையுங் கொண்டு, இதன்மிகுதியால் நடுநாடியாகிய சுழுமுனை அடைபட்டு, இடப்பால் நாடியாகிய இடகலையும், வலப்பால் நாடியாகிய பிங்கலையும் திறந்து, உயிர் மூச்சு (பிராணவாயு) உட்புகுந்து மேல்நோக்கி மூக்குத் தொளைகளினாலே விட்டவெழுத் (சிவசிவ)தாலே நாளோன்றிற்கு இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்சுக்கள் தோன்றி முப்பத்திரண்டு நூறாயிரத்து நாற்பதினாயிரம் உருச்சென்றவாறே வயிற்றுவினை நீங்கித் தாயினிடத்துண்டான உயிர்மூச்சில் முதல்வனுடைய தண்ணளியாலே ஆற்றல் இயக்கிக்கொண்டு இவ்வாற்றலின் வலியுடனே உணர்வை உலகத்திலே பதித்தல் வேண்டி உணர்வுடையது என்னும் பெயர்பெற்று இவனுடைய உடம்பும் கீழ்நோக்கி விழும்படி தன்னுடைய வலுவினாலே தலைகீழாகத் தள்ளிப் பூமியில் வரச் செய்தருள்வன், இதனால் "கட்டுண்டிருந்தவெமை வெளியில் விட்டென்றனர்." இவ்வுண்மை வருமாறுணர்க :

"மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
 சாலப் பெரியரென் றுந்தீபற
 தவத்திற் றலைவரென் றுந்தீபற."
- திருவுந்தியார்,12