பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


71


    "பெரியபுவ . . . . . . அமைத்திட்டு" - (இருநூற்றிருபத்து நான்கு என எண்ணப்படும் புவனங்களுள்) பெருமைமிக்க ஒரு புவனத்தினிடை (இறப்புப் பிறப்புகளாகிய) போக்குவரவுகள் இடையீடின்றிப் புரிந்து வருகின்ற உலகியல்பானும், ஆணவமறைப்பாலும்) பெரிய விளையாட்டு அமைத்திட்டு;

    "ஏரிட்ட முதலே" - (அழகு மிக்கதாய் ஆருயிர் உய்வதாய் அனைத்து மொழிகளிலும் அவரவர் நிலைக்கேற்ற அளவினதாய்க் காணப்படுவது போன்று) செந்தமிழ்மொழிக்கண் சீர்சால் இறைவனூல் என்று சொல்லப்படும் திருமாமறை திருமாமுறைகளை வகுத்தமைத்து அவற்றின்கண் விதித்த திருஆணைவழி நில்லாது தவறின் நடுவன் என்று சொல்லப்படும் நமனைக்கொண்டு துன்பமுண்டாகும்படி தண்டித்து, அத் துன்பினையும் அகற்றி (நினைப்பும் மறப்பும் ஒளியும் இருளுமாகிய) இரவு பகலில்லாத இறவா இன்பத் தெழில்நிலமாகிய திருவடிப்பேரின்ப உறையுளினில் வல்விரைந்து நீங்காது தங்கித் தேனுண்ட வண்டென இன்ப நுகர்கவென்று பணித்தருளிய பண்டைப் பெருஞ்சிறப்பு மிக்க பேருலக அன்னையின் ஆரருள்வடிவான எளியேங்கள், தந்தையே! செம்பொருட்டுணிவின் தம்பெரும் பேறருள் விழுமிய முழுமுதலே;

        "சிரகிரி . . . . . . குருவே"

     (வி - ம்) கார் - கருமை. ஆணவம் - பழமலம். பாழ் - வீணான பொய் - நிலையில்லாத. துயில்கொள்ளுதல் - நீங்காது தங்கி யின்புறுதல். இரவு பகலில்லாதது - அளவில்லாத இயற்கையருளொளி விளங்குதலால் அந்நிலையம் இரவு பகல் இல்லாதது என்ப. சித்தாந்த முத்தி - செம்பொருட்டுணிவின் தம்பெரும் பேறு.

     புறவிருளானது பொறிநுகர்புலன்களாகிய பொருள்களை மறைத்துக்கொண்டு நிற்கின்ற தெனக் கூறப்படுந் தன்மைத்து. அகவிருளாகிய பழமலம் தானுண்டெனக் காட்டாததோடு தான் புல்லியிருக்கின்ற உயிர் தானொரு பொருள் வேறெனக் காணவும் ஒட்டாது தன்னுள் அடக்கிநிற்கும், இந்நிலையில் ஆருயிர்கட்கு இயல்பாயுள்ள அன்பறிவாற்றல்கள் சிறிதும் விளங்கவொட்டாது தடுத்து நிற்கும் அம் மலச் சார்பால் அவை விளங்குவனவல்ல. இவை விளங்காதிருப்பதே உயிர் தன்னையுணராதிருப்பதாம். இவ்வுண்மை வருமாறுணர்க :

"ஒருபொருளுங் காட்டா திருள்உருவங் காட்டும்
 இருபொருளுங் காட்டா திது."
-திருவருட்பயன், 23
"ஏகமாய்த்1 தங்கால எல்லையினின் மீளும்
    எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட
மோகமாய்ச் செம்பினுரு களிம்பேய்ந்து நித்த
    மூலமல மாயறிவு முழுதினையும் மறைக்கும்
 
 1. 
ஒன்றதாய் , 2. 4 - 8.