பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


79


     (எவ்வகைப்பட்ட காட்டுக்களாகிய) துணை சிறிதுமில்லாத, மேலான தன்னுகர் வுண்மை யெனும் மெய்யுணர்வு கைவரப்பெறுவதாம்;

    "பண்பென் . . . . . . முதலே" - அதுவே (திருவடியுணர்வு கைவர) வருதற்குரிய வழிவகைத் தன்மையென்றும், நீ அறிவுறுத்தி அருளினமையைப் பகுத்தறியாமல், அவ்வரிய நிலையிற் றங்கிய உன் பேரருட்குரிய பழைய அடியார்களுடைய, தொன்மைச் சிறப்பினை எய்தியிருக்க, (அடியேனுக்கு) நின் திருவருள் வேண்டும். (அழகும், வியப்பும், முதன்மையும் ஒருங்கமைந்த) கடவுளே! முடிந்த முடிவாம் திருவடிப்பேற்றினை அளித்தருளும் விழுமிய முழு முதல்வனே!

        "சிரகிரி . . . . . . .குருவே"

     (வி - ம்) சமாதி - உணர்வின்கண் ஒருநிலைப்பட ஒற்றித்து அடங்கிநிற்கும் நிட்டை. அனுபூதி - நுகர்வுணர்வு; மெய்யுணர்வு. சீர் - தொன்மைச் சிறப்பு.

    முதல்வன் செவ்விநோக்கிச் சிவகுருவாய் எழுந்தருளல் :

"மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ் ஞானகலர்க்
 கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய்1 -மெய்ஞ்ஞானம்
 பின்னுணர்த்து மன்றிப் பிரளயா கலருக்கு
 முன்னுணர்த்தும் தான்குருவாய் முன்"
- சிவஞானபோதம், 8. 2 - 1.
 
- "முத்திதரு
 10
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும்
 
அந்நிலையே உள்நின் றறுத்தருளிப்-பின்அன்பு
 
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
 
தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப-பூவலயந்
 
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
 
முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை-அன்னவனுக
 
காதிகுண மாதலினால் ஆடுந் திருத்தொழிலுஞ்
 
சோதி மணிமிடற்றுச் சுந்தரமும்-பாதியாம்
 
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
 
வைச்ச நதியும் மதிக்கொழுந்தும்-அச்சமற
 15
ஆடும் அரவும் அழகார் திருநுதல்மேல்
 
நீடுருவ வன்னி நெடுங்கண்ணும்-கேடிலயங்
 
கூட்டுந் தமருகமும் கோல எரியகலும்
 
பூட்டரவக் கச்சும் புலியதளும்-வீட்டின்ப
 
வெள்ளத் தழுத்தி விடுந்தாளி னும்மடியார்
 
உள்ளத் தினும்பிரியா ஒண்சிலம்பும்-கள்ளவினை
 1 
உரைதருமிப். சிவஞானசித்தியார், 8 1-1.