போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப் | புனிதமாய் அவிகாரமாய்ப் | போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின் | பூரணம் புகலிடமதா | ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின் | அருள்பின்னும் அறிவின்மைதீர்த் | தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற் | கறிவாவ தேதறிவிலா | ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக் | கீடான காயமேதென் | இச்சா சுதந்தரஞ் சிறிதுமிலை இகபரம் | இரண்டினுள் மலைவுதீரத் | தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |