சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |
(பொ - ள்) "பத்திநெறி . . . . . . தனக்கடைத்து" - பேரன்பின் பெருக்காம் பத்திவழியில் உறைத்துநின்றும், ஒன்பது பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உலகங்களையெல்லாம் (சிறிதும் சலிப்பின்றிப் பதிநடையாகச் சென்று) வலஞ்சுற்றிவரினும், (தீர்த்தங்களுட் சிறந்த) கடல் நீராடினாலும் (புனிதமாகச் சொல்லப்படும்) காவிரி முதலியயாறுகளிற் சென்று முறைப்படி தீர்த்தமாடினாலும், பசியும் விடாயும் இல்லாமல் எழுநா என்று சொல்லப்படும் தீயின் நடுவில் நின்றும், உற்றபசியினுக்கு (கொடுத்தல் வேண்டு மென்னும் வெறுப்பொடு) முறையே உதிர்ந்த சருகுகளையும், நன்னீரையும், காற்றினையும் வயிற்றுக்கு அடைத்தும்;
"மௌனத் . . . . . . .வட்டத்தடைத்தும்" - வாய்வாளா திருந்தும், அளவிடப்படமுடியாத பெரிய மலைகளின் குகைக்குளிருந்து தனித்தவம் புரிந்தும், நிலைபெற்ற நாடிகள் பத்தையும் (அகத்தவமாகிய யோகவாயிலாக) தூய்மைப்படுத்தியும், மூலத்திடத்துக் காணப்படும், உயிர் மூச்சினொடு அகத்தீயினைத் திங்கள் மண்டலத்தடைத்தும்;
"சொல்லரிய .......... முதலே"(அத் திங்கள் மண்டலத்துள்ள) சொல்லொண்ணாத அமிழ்தினை உண்டும், (நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத) புல்லிய உடலை ஊழி ஊழியாக அழியாது நிலை நிறுத்திடப் பெருமை மிக்க சித்திகளைச் செய்தும் திருவடியுணர்வு திருவருளால் கைவரப் பெறாதாருக்குத் திருவடிநிலைபெற் றின்புறுதல் ஒரு ஞான்று மில்லை. முடிந்தமுடிவுப்பே றருளும் விழுமிய முழுமுதல்வனே.
"சிரகிரி . . . .குருவே"
(வி - ம்) பத்தி - பேரன்பு. நவம் - ஒன்பது. கண்டம் - பிரிவு. பரவை - கடல். நதி - யாறு. நுழை - குகை. தசம் - பத்து. அங்கி - தீ. சோமவட்டம் - திங்கள்மண்டிலம். அற்பவுடல் - புல்லியவுடல். வீறு - பெருமை.
நற்செயல்கள் அனைத்தும் பத்தியின் அடிப்படை நிலைக்களத்து நின்றே தோன்றுவன. இவ்வுண்மை வருமாறு காண்க:
| "ஒத்துல கேழும் அறியா ஒருவனென் |
| றத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப் |
| பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது |
| முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே."- 10. - 258 |
ஒன்பது கண்டங்களின் பெயர் வருமாறு :