பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


82


அவ்வுயிர்க்குத் தன் திருவடியின்பத்தை யூட்டியருள முதல்வன் திருவுள்ளங்கொண்டருளினன்; அதன் பொருட்டு அம் மலம் போன்று தொன்மையிலேயே யுள்ள மாயையினின்று உலகுடல்களையும் கன்மத்தினின்று செயல்புரியும் இயல்பினையும் அவ்வுயிர்களுடன் பொருத்துவித்தருளினன். அவ்வுயிர்களும் வினைசெய்யத் தொடங்கி வினைபுரிவவாயின. அவ்வினைக்கீடாக மீண்டும் மீண்டும் பிறப்புகள் உண்டாகின்றன.

     அறிவில்லாத (சடங்கள்) பொருள்கள் அறிவுடைப் பொருள்களுடன் கூடின் செயல்புரிவனவாகும். அதுபோல் அறிவில்லாத வினைகளும் அறிவுடைய உயிர்களுடன் கூடியபொழுது செயல் செய்வவாயின. பானை சட்டி முதலிய அறிவில்லாத பொருள்கள் அறிவுள்ள உயிர்களுடன் கூடின விடத்தும் செயல் செய்யக் கண்டிலம் எனின்? அவ்வொப்பினை விடுத்து நஞ்சு முதலிய அறிவில்லாத பொருள்கள் அறிவுள்ளவுயிர்களுடன் கூடியவிடத்து அவை தத்தம் செயல்களைச் செய்யக் காண்டும். அவ்வொப்பினை எடுத்துக்கொள்வது ஏற்புடைத்தாம்.

     மும்மலமும் தொன்மையிலேயே யுள்ளன என்னும் உண்மை வருமாறுணர்க :

"நெல்லிற்1 குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும்
 சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி
 மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
 அலர்சோகஞ் செய்கமலத் தாம்."
- சிவஞானபோதம் 2. 2 - 1
(10)
பத்திநெறி நிலைநின்றும் நவகண்ட பூமிப்
    பரப்பைவல மாகவந்தும்
  பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்
    பசிதாக மின்றியெழுநா
மத்தியிடை நின்றும்உதிர் சருகுபுனல் வாயுவினை
    வன்பசி தனக்கடைத்து
  மௌனத் திருந்தும்உயர் மலைநுழைவு புக்கியும்
    மன்னுதச நாடிமுற்றுஞ்
  சொல்லரிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள்
    தோறும்நிலை நிற்கவீறு
 1. 
'மும்மல நெல்லி' சிவஞானசித்தியார் 2. 4 - 14. 
  
"'நெல்லினுக்குத்' " 11 - 6