(அகப்புறம்) பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம்.
அகச்சமயத்தார் முதல்வன் உண்மை தெளியப் பெற்றும் திருவடிக்கலப்புண்மை தெளியா நிலையினர். இவற்றின் தன்மை,
| இறையுண்மை யில்லார் இறையுயிரே என்பார் |
| இறைகோலம் பேற்றியைபில் லார். |
இச் சமயங்களின் புன்மை வருமாறு :
"உவலைச் சமயங்கள்" (பக்கம் 53)
| "சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின் |
| றாவி யறாதேயென் றுந்தீபற |
| அவ்வுரை கேளாதே யுந்தீபற." |
| - திருவுந்தியார், 13 |
பாசம் என்பது ஆணவமல விருளென்பதனை வருமாறுணர்க :
| "இருளான தன்றி இலதெவையும் ஏகப் |
| பொருளாகி நிற்கும் பொருள்." |
| - திருவருட்பயன், 22 |
"மெய்யுணர்வுடையாரை மதயானையாக" உருவகிக்கும் உண்மை வருமாறுணர்க :
| "கலைதேர் நமச்சி வாயகுரு கருணைக் கடலிற் றிளைத்தாடி |
| கலகப் பாசத் தொடரறுத்துக் காமத் தறியை யறவீழ்த்தி |
| அலையும் சமயத் தருக்களைக்கீழ் அடிவே ரோடும் அகழ்ந்தெறிந்திட் |
| டருளின் படாத்தை முகமேற்கொண் டாதி வேதா கமங்களெனும் |
| தொலையா மணிகள் இருமருங்கும் தொனிக்கச் சைவ மதம்பொழிந்து |
| துங்க மோடும் உலகமுற்றும் சுற்றும் வெற்றி வாரணமே |
| மலையா தருளும் முனிவர்சிகா மணியே வருக வருகவே |
| வளமார் துறைசைச் சிவஞான வள்ளால் வருக வருகவே." |
| - திரு. பொ. பாண்டித்துரைத்தேவர், தனிப்பாடல். |
(1)
ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும் | அடங்கவெளி யாகவெளிசெய் | தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள் | அறிவாக நின்றநிலையில் |