எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே | எல்லாமுன் னுடையசெயலே | எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென் | றிருக்காதி வேதமெல்லாஞ் | சொல்லான் முழக்கியது மிக்கவுப காரமாச் | சொல்லிறந் தவரும்விண்டு | சொன்னவையு மிவைநல்ல குருவான பேருந் | தொகுத்தநெறி தானுமிவையே | அல்லாம லில்லையென நன்றா அறிந்தேன் | அறிந்தபடி நின்றுசுகநான் | ஆகாத வண்ணமே இவ்வண்ண மாயினேன் | அதுவுநின தருளென்னவே | கல்லாத அறிஞனுக் குள்ளே யுணர்த்தினை | கதிக்குவகை யேதுபுகலாய் | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |