அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை | அறியாத பக்குவத்தே | ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான் | அற்றேன் அலந்தேன்என | என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய் | இரங்கியொரு வழியாயினும் | இன்பவௌ மாகவந் துள்ளங் களிக்கவே | எனைநீ கலந்ததுண்டோ | தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு | தண்முகை தனக்குமுண்டோ | தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத | தன்மையால் தனியிருந்து | துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்டர் | சுகம்வந்து வாய்க்கும்உரையாய் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |