"சுத்தநிர்க் . . . .சுகவாரியே" - (வி - ம்.) பார் - நிலவுலகம். அண்டம் - முட்டை வடிவாகக் காணப்படும் நுண்வெளி. தூமாயை - சுத்தமாயை. இவ்வெளி மாயாகாரியமாகிய அறிவில் வெளி. இதற்கும் நிலைக்களமாகத் திகழ்வது அறிவுடைத் திருவருட் பரவெளி. இதனைச் "சிற்பரவியோமம்" என்பர். பாவியேன் - குறைபாடுடையேன். பரிசு - தன்மை; பண்பு. நிர்ச்சிந்தை - மனவொடுக்கம். சதாகாலம் - எப்பொழுதும். நிட்டை - மனம் ஒருங்கி நிற்றல். வேண்டத்தக்கதாய்ப் பழக்கமுற்றதொன்று கைவரப்பட்ட விடத்து அது வழக்கமென வழங்கப்படும். இந்நிலையினையே சகச நிலையென்பர். சுகாதீதம் - உள்ளங் கடந்துள்ள எங்கு நிறைந்த தாகிய பொங்கு பேரின்பம் கார் - மேகம். எண்ணரும் - கணக்கிடமுடியாத. காலூன்றி - மழையொழுக்கு உன்றி, கால்வீசி - காற்று. கம்மி - நிறைந்து. கமம் - நிறைவு. ஆனந்தம் - இன்பம். கூவுதல் - அழைத்தல். கூவிப் பணிகொளும் உண்மையினை வருமாறுணர்க :"அடியேன் அல்லல் எல்லாமும் அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎங் கோவே யாவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெற்றுக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தாலொன்றும் போதுமே."- 8. குழைத்தபத்து-2. அறிவுப் பெருவெளியுண்மையினை வருமாறுணர்க :"கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலோஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி."- 12. தில்லைவாழந்தணர், 2. (8) பேதித்த சமயமோ ஒன்றுசொன படியொன்று பேசாது துறவாகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற் பத்தினால் பேசார்கள் பரமகுருவாய்ப்போதிக்கும் முக்கண்இறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்ப தாச்சறிவிலே போக்குவர வறஇன்ப நீக்கமற வசனமாப் போதிப்ப தெவரையனே
"அடியேன் அல்லல் எல்லாமும் அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎங் கோவே யாவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெற்றுக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தாலொன்றும் போதுமே."- 8. குழைத்தபத்து-2.
"கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலோஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி."- 12. தில்லைவாழந்தணர், 2.
பேதித்த சமயமோ ஒன்றுசொன படியொன்று பேசாது துறவாகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற் பத்தினால் பேசார்கள் பரமகுருவாய்ப்போதிக்கும் முக்கண்இறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்ப தாச்சறிவிலே போக்குவர வறஇன்ப நீக்கமற வசனமாப் போதிப்ப தெவரையனே