பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

218
     "இவையன்றி . . . முதலே" - இவற்றையன்றி வேறுவழக்கு ஏதும் உண்டென்னில் (எவ்வகைத்துணையுமின்றித்) தன்னந்தனியனாய் நிற்கும் எளியேன் பொறுக்கும் வன்மையுடையேனல்லன்; படர்ந்து, பரவி, பணிதலாகிய போற்றுதலைப் புரிகின்றேன்; பெருகும் நன்னெறிப் பேற்றினை நல்கியருளும் முழுமுதல்வனே!

         "சர்வபரி . . . சிவமே" -

     (வி - ம்.) அங்கி - தீ. விவகாரம் - வழக்கு. படர்தல் - நினைத்தல். பரவுதல் - வாழ்த்துதல். பணிதல் - வணங்குதல்.

     சித்தாந்தசைவச் செந்நெறியினர் வேண்டுகோள் வருமாறு :

"இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
 பிறவாமை வேண்டு மீண்டும் பிறப்புண்டே லுன்னை என்றும்
 மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
 அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீ ழிருக்க வென்றார்."
- 12. காரைக்காலம்மையார் - 60.
(9)
 
வேதாவை இவ்வணம் விதித்ததே தென்னின்உன்
    வினைப்பகுதி என்பன்அந்த
  வினைபேச அறியாது நிற்கஇவை மனதால்
    விளைந்ததால் மனதைநாடில்
போதமே நிற்குமஅப் போதத்தை நாடிலோ
    போதமும் நினால்விளக்கம்
  பொய்யன்று தெய்வமறை யாவுமே நீயென்று
    போக்குவர வறநிகழ்த்தும்
ஆதார ஆதேயம் முழுதுநீ யாதலால்
    அகிலமீ தென்னைஆட்டி
  ஆடல்கண் டவனுநீ ஆடுகின் றவனுநீ
    அருளுநீ மௌனஞான
தாதாவு நீபெற்ற தாய்தந்தை தாமுநீ
    தமருநீ யாவுநீகாண்
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "வேதாவை . . . விளக்கம்" - (விழுமிய முழுமுதல்வன் திருவாணைத் திருக்குறிப்பின்வழி) படைத்தற்றொழிலைச் செய்யும் வேதாவாகிய நான்முகனை அடியேனை இங்ஙனம் படைத்து