எறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக | அல்ல லென்றொருவர் பின்செலா | தில்லை யென்னுமுரை பேசி டாதுலகில் | எவரு மாமெனம திக்கவே | நெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி | நோய்க ளற்றசுக வாழ்க்கையாய் | நியம மாதிநிலை நின்று ஞானநெறி | நிட்டை கூடவுமெந் நாளுமே | அறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும் | அன்றி மோனகுரு வாகியே | அகில மீதுவர வந்த சீரருளை | ஐய ஐயஇனி என்சொல்கேன் | சிறிய னேழைநம தடிமை யென்றுனது | திருவு ளத்தினிலி ருந்ததோ | தெரிவ தற்கரிய பிரம மேஅமல | சிற்சு கோதய விலாசமே. |