பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

262
மலர்மண ஒப்பு வருமாறு :

"உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போற்
 பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
 பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே
 அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே."
- 8, அதிசயப். 1
"அருவுருவந் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா
 அருவுருவம் அன்றாகும் உண்மை - அருவுருவாய்த்
 தோன்றியுட னில்லாது தோன்றாது நில்லாது
 தோன்றன் மலர்மணம்போற் றொக்கு."
- சிவஞானபோதம், 7. 3 - 1.
     முதல்வன் உறுதுணையாக நின்றருளும் உண்மை வருமாறு :

"உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல்
 கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய
 கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்
 அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே."
- 4. 93 - 2.
     அம்பலச் சிறப்பு வருமாறு :

"அம்பல மாவ தகில சராசரம்
 அம்பல மாவது ஆதிப் பிரானடி
 அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
 அம்பல மாவது அஞ்செழுத் தாமே."
- 10. 2729.
(1)
 
அனந்தபத உயிர்கள்தொறும் உயிரா யென்றும்
    ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத்
தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச்
    சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே
இனம்பிரிந்த மான்போல்நான் இடையா வண்ணம்
    இன்பமுற அன்பர்பக்க லிருத்தி வைத்துக்
கனந்தருமா கனமேதண் அருளில் தானே
    கனிபலித்த ஆனந்தக் கட்டிப் பேறே.
     (பொ - ள்) "அனந்தபத . . . தேவே" - (ஆருயிர்கட்கு இருவினைக் கீடாகவும், மலப்பசைக்கீடாகவும் நேரிடும் வெவ்வேறு நிலைகள் அளவிறந்தன ஆதலின்) அளவில்லாத நிலைகளில் தோன்றி நின்று மறையும்