தானான தன்மயமே யல்லால் ஒன்றைத் | தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே | போனாலுங் கர்ப்பூர தீபம் போலப் | போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம் | ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற | ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் | ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார் | அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும். |