பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

288
பதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட
    படிக்குநிரு விகற்பத்தாற் பரமா னந்த
கதிகண்டு கொள்ளவும்நின் னருள்கூ ரிந்தக்
    கதியன்றி யுறங்கேன்மேற் கருமம் பாரேன்.
     "அதுவென்றா . . . வாழ்ந்தாரென்றும்" - (திருவடியின்கண் சாரும் மெய்ப்புணர்ப்பு நிலைமையில்) அது வென்று கூறும் சொல்லொன்று தோன்றுமானால், எது என்று வினவுவதற்கு ஏதுவாகிய ஐயம் ஒன்று தோன்றும்; ஆகையால் அது வென்று கூறுதலையும் அறவேயொழித்து, இன்பத்தேனினை முன்னணைந்து உண்டு தேக்கித் தன்னையும் அத்தேனையும் மறந்து இன்பநிலையாகவே நிற்கும் வண்டு போன்று (கடமை வழுவாது பற்றற்ற மெய்யுணர்வுடன் உலகமாண்ட உள்ளத்துறவும் உரனுமுடைய) சனகர் முதலிய மன்னர்களும், பிறந்தநாள் தொட்டே துறவு நிலையிலிருந்த சுகர் முதலிய முனிவர்களும் திருவடியுணர்வாகவே வாழ்ந்தா ரென்றும்.

     "பதியிந்த . . . பாரேன்" - இந்நிலையில் நில்லெனவும் ஆட்கொண்டருளும் பதியெனவும், அடியேனை ஆண்டுகொண்டருளிய முறைமைக் கேற்ப வேறுபாடற்ற நிட்டையில் நின்று, மேலாகத்திகழும் பேரின்ப நிலையினைக் கண்டுகொள்வாயாக எனவும், நின்திருவருள் அடியேனுக்குப் புரிந்தருள வேண்டும்; இந்நிலையினை எளியேன் எய்தியன்றி உறங்குதல் செய்யேன்; வேறொரு செயல் செய்ய நோக்கமுங் கொள்ளேன்.

     (வி - ம்.) சனகன் : மிதிலாபுரியை அரசாண்ட அரசவரரோமன் என்னும் மன்னனின் மகன். தருமத்துவசன் என்னும் பெயர் வாய்ந்து வாழ்ந்தவொரு மெய்யுணர்வினன். தன் அரண்மனை தீப்பட்டழியவும் சிறிதும் மனநிலை குலையாமல் மெய்யுணர்வு நிலையினின்றும் நீங்காது நின்றனன். அதேயிடத்தில் அரண்மனைப்புறத்தே உலரவைத்திருந்த கோவணத்தின் பொருட்டுக் கவன்றோடிய சுகமுனி வரை நோக்கி உமதுதுறவு நன்றாயிருக்கிற தென்று புன்னகை புரிந்து நிட்டையில் தோன்றும் ஐயம் நீக்கினன்.

     சுகர் : இவர் வியாசருக்கும் கிளிவடிவத்துடனிருந்த கிருகாசி யென்னும் அப்சரமாதுக்கும் பிறந்தவர். இவர் பிறந்தவுடன் துறவு பூண்டனர். இவரை அரம்பை என்னும் தெய்வப்பெண் தன்மயக்கில் சிக்குமாறு பல்லாற்றானும் முயன்றனள். இவர் சிறிதும் மயங்காது தந்நிலையில் நின்றனர் என்ப.

(23)
 
பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
    பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
    வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு