அண்ண லேஉன் னடியவர் போலருட் | கண்ணி னாலுனைக் காணவும் வாவெனப் | பண்ணி னாலென் பசுத்துவம் போய்உயும் | வண்ண மாக மனோலயம் வாய்க்குமே. |
(பொ - ள்) ஒப்பிலாப் பெரியோனாகிய அண்ணலே! (அடியேனை) உன்மெய்யடியார்களைப் போன்று திருவுள்ளங்கொண்டு, நின் திருவருட்கண்ணினால் உன் திருவடியினைக் காணுமாறு வருவாயாகவெனப் பணித்தருள்வாயாயின், எளியேனின் பிணிப்புத்தன்மை எனப்படும் பசுத்துவம் போயொழியும்; (ஒழியவே அடியேன் நின் திருவடி நீழலை விட்டகலா திருத்தற்குரிய) உளத்தொடுக்கம் வந்து வாய்க்கும்.
திருவருளால் இருள் நீங்குதலும் உய்தலும் உண்டா மென்னும் உண்மை வருமாறு :
| "பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம் |
| மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை |
| நின்னுள் ளத்தருள் கொண்டிரு ணீங்குதல் |
| என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே." |
| - 5. 96 - 1 |
| "கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ |
| டுள்ள மொன்றி யுள்குவா ருளத்துளா னுகந்தவூர் |
| துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் |
| அள்ளனாரை யாரல்வாரு மந்தணாரூ ரென்பதே." |
| - 2. 101 - 6. |
(41)
வாய்க்குங் கைக்கும் மௌனம் மௌனமென் | றேய்க்குஞ் சொற்கொண் டிராப்பக லற்றிடா | நாய்க்கும் இன்பமுண் டோநல் லடியரைத் | தோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே. |
(பொ - ள்) கைகட்டி வாய்புதைத்து அடங்கியிருப்பதால் செயலற்று, உரையற்று அமைந்திருக்கும் மௌனம் மௌனம் என்று ஏமாற்றுஞ் சொல்லினைச் சொல்லிக்கொண்டு, இராப்பகலற்றிடாத நாயினும் தாழ்வான எளியேனுக்கும் இன்பமுண்டாமோ? திருவருளால் நன்மைமிக்க அடியவர்களை இடையறாது மூழ்குவிக்கும் பேரின்பத்தூயவெளிப் பெருவெள்ளமே.
இராப்பகலென்பது நினைப்பு மறப்பென்பதும், புணர்வு, புலம்பு என்பதும் குறிப்பனவாகும். தூவெளி - தூய அறிவுவெளி. மனமொடுங்குவதே மௌனமாம். இரா - மறப்பு.
(42)
தூய தான துரிய அறிவெனுந் | தாயும்நீ இன்பத் தந்தையும் நீஎன்றால் |