பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

391
பொறியிற் செறிஐம் புலக்கனியைப்
    புந்திக் கவராற் புகுந்திழுத்து
மறுகிச் சுழலும் மனக்குரங்கு
    மாள வாளா இருப்பேனோ
அறிவுக் கறிவாய்ப் பூரணமாய்
    அகண்டா னந்த மயமாகிப்
பிறிவுற் றிருக்கும் பெருங்கருணைப்
    பெம்மா னேஎம் பெருமானே.
    (பொ - ள்.) மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளாகிய மரத்தின்கண், ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும் ஐம்புலக்கனிகள் பழுத்துத் தொங்குகின்றன. மனமென்னுங் குரங்கு அக் கனிகளைக் கவரவுன்னிப் புத்தியாகிய கிளைவழியே புகுந்து ஏறி அக் கனிகளை வலிந்திழுத்து மயங்கிச் சுழலுகின்றது. அறிவினுக்கு அறிவாய் எங்கணும் நிறைவாய் எல்லையில்லதாய்ப் பேரின்பமயமாய்ப் பிரிவில்லா திருந்தருளும் பெருங்கருணைப் பெருமானே, எம்மை ஆட்கொண்டருளும் பெருமானே! அம் மன மடங்கச் செயலற்று நின்திருவருளால் வாளாயிருப்பேனோ?

(13)
உரையுணர் விறந்து தம்மை உணர்பவர் உணர்வி னூடே
கரையிலா இன்ப வெள்ளங் காட்டிடும் முகிலே மாறாப்
பரையெனுங் கிரணஞ் சூழ்ந்த பானுவே நின்னைப் பற்றித்
திரையிலா நீர்போல் சித்தந் தெளிவனோ சிறிய னேனே.
    (பொ - ள்.) சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாததாகிய தூய மெய்ப்பொருளானது, திருவருளால் தம்மை அறிவில்லாத உடலின் வேறென வுணர்ந்தவர் மெய்யுணர்ந்தவர் ஆவர். அவர்தம் உணர்வின்கண் முடிவில்லாப் பேரின்ப வெள்ளம் காட்டியருளும் பெருமழையே, மாறுதலடையாத வனப்பாற்றலாய திருவருட்கதிர்கள் சூழப்பெற்ற சிவசூரியனே, நின்திருவடியினைப் பெருங்காதலுடன் பற்றி அலையகன்ற அமைதியான நன்னீர் போன்று எளியோனாகிய சிறியேன் உள்ளந் தெளிவுறுவேனோ?

(14)
கேவல சகல மின்றிக் கீழொடு மேலாய் எங்கும்
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பந்
தாவிட இன்பா தீதத் தனியிடை யிருக்கி வைத்த
தேவெனும் மௌனி செம்பொற் றேனும் ஞானம்
    (பொ - ள்.) கேவலமாகிய மறப்புற் ----------------- இருதன்மையும் இல்லாமல், கீழென புடையெனவும் சொலலப்படும் --------------திருவருளே கண்ணாகப் பொருந்த ------------.