தானந் தவஞ்சற்றும் இல்லாத நான்உண்மை தானறிந்து | மோனம் பொருளெனக் கண்டிடச் சற்குரு மோனனுமாய்த் | தீனன் தனக்கிங் கிரங்கினை யேஇனிச் சிந்தைக்கென்றும் | ஆனந்தந் தானல்ல வோபர மேசச்சி தானந்தமே. |
(பொ - ள்.) உறுபயன் விரும்பி உயர்வற உயர்ந்தோர்க்கு மயர்வகன்று மனமுவந்து வாழ்த்தி வணங்கிப் பணிந்து கொடுப்பதாகிய தானமும், பொறிபுலனடக்கிப் புண்ணியன் பொன்னடி புகன்று செய்யும் வழிபாடாகிய தவமும் ஒருசிறிதுமில்லாத அடியேன் (தன்னைத் தலைவனைத், தடைமலத்தைத் தண்ணருளைத் தாளிணை சேரின் பினை உணரும்) உண்மையினை உள்ளவாறுணர்ந்து, பேசாமையாகிய மோனமே பொருளெனக் கொண்டொழுக, சிவகுருவாய் மோன நிலையனுமாய், எளியேன்பால் கழிவிரக்கங்1 கொண்டருளினையே, இனி மேல் நாட்டமாகிய சிந்தைக்கு எக்காலத்தும் மாறாப் பேரின்பந் தானன்றோ? மேலாம் மெய்ப்பொருளே! உண்மையறிவின்ப ஒருவனே!
(15)
எனக்கோர் சுதந்திர மில்லையப் பாஎனக் கெய்ப்பில்வைப்பாய் | மனக்கோ தகற்றும் பரம்பொரு ளேஎன்னை வாழ்வித்திட | நினக்கே பரம்நின்னை நீங்காத பூரண நீள்கருணை | தனக்கே பரமினிச் சும்மா விருக்கத் தகுமென்றுமே. |
(பொ - ள்.) ஆண்டருளும் அப்பனே! அடியேனுக்கோர் முதன்மையும் உரிமையும் இல்லை; எளியேனுக்கு இளைத்தவிடத்துத் தழைத்துத் தாங்கும் தனிப்பெரும் செல்வமாய், மனமாசகற்றும் மாறில் பெரும் பொருளாய் விளங்கும் சிவனே! ஏழையேனை வாழ்வித்திடுதல் நின் பொறுப்பாகும்; நின்னைவிட்டு நீங்காது அகங்கையும் புறங்கையும் போன்று ஒட்டி ஒரு பொருளாய் நிற்கும் வனப்பாற்றல் எனப்படும் முழு நிறைவாம் விழுப்பேரருள் தனக்கே பொறுப்பு; இனி அடியேன் எக்காலத்தும் சும்மாவிருத்தலாகிய மோனநிலையினைக் கைக்கொள்ளுதல் தகும். சும்மாவிருத்தல் - சிவனே என்றிருத்தல். ஆருயிர்கட்குச் சுதந்திரமின்றென்னுமுண்மை வருமாறு :
| "அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினால் அறிதலானும் |
| அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறிதலானும் |
| அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே |
| அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவன் அன்றே." |
| - சிவஞானசித்தியார், 5. 2 - 2. |
(16)
இடம்பெறு வீடும்மின் னார்செய் சகமும் இருநிதியும் | உடம்பைவிட் டாருயிர் போம்போது கூடி உடன்வருமோ |
1. | 'வினையிலே' 8. திருச்சதகம். 22. |