பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

453
உற்றாய்ந்து உணர்தல் செய்யாயோ? திருவருளால் அவ்வுண்மையினை உன் மாசிலா உணர்வின்கண் புணர்ந்து நோக்காயோ? நெஞ்சே சொல்வாயாக. மறை - வேதம். முறை - ஆகமம். மாசிலா உணர்வு - திருவடியுணர்வு. புணர்ந்து - கூடி; அத்துவிதமாய்க் கூடி.

(11)
நேராயம் மௌனநிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர் - தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையுமனக் கல்.
     (பொ - ள்.) நேராக (மௌனகுருவால் அருளிச் செய்யப்பட்ட) அந்த மோன நிலையினில் உறுதியாக உறைந்து நில்லாமல், வாய்ப்பேச்சளவில் அம் மோனத்தைப்பற்றி மிக விரிவாகப்பேசி உள்ளங்களை யாராக எண்ணி அலைகின்றீர்கள்? ஐயோ கேடெய்துவீர். திருவருள் அலைபெருகி ஒலிக்கும் வான்யாறு சேர் திருச்சடையினை உடைய சிவபெருமானை உங்கள் வாயால் இடையறாது வாழ்த்தி வழிபடுங்கள். வழிபடவே உங்களுடைய கல்லினும் வலிதாகிய மனக்கல் கரையும். கரையும் - உகும்.

(12)
அற்ப மனமே அகிலவாழ் வத்தனையுஞ்
சொற்பனங்கண் டாயுண்மை சொன்னேன்நான்-கற்பனையொன்
றில்லா இடத்தே எனைச்சும்மா வைத்திருக்கக்
கல்லாய்நீ தானோர் கவி.
     (பொ - ள்.) சிறுமையுற்று இழிவெய்தும் மனமே! இந் நிலவுலக வாழ்வினை நிலையென்றெண்ணாது, முடிவுபோக நில்லாத கனவு போன்றதென்று கொள்வாயாக, அஃதே உண்மை. யாமும் உண்மை சொன்னேம்; ("நான் அவனென்று" என்ணுவதாகிய வேறுபாட்டு நினைவினைக் கொள்ளாது தாடலைபோற் புணரும் மெய்புணர்ப்பினை என்ணும் நினைவினையே கொள்ளுதல் வேண்டும்) வேறுபாட்டு நினைவு ஒரு சிறிதும் இல்லாதவிடத்து என்னைச் சிவனென்றே இருக்க ஓர் அரிய செந்தமிழ்ப் பா 1 வினைக் கற்று ஓதுவாயாக.

(13)
ஏதுந் திருவருளின் இச்சையாம் என்றென்றெப்
போதும் பொருந்தும் புனிதர்பால் - தீதுநெறி
செல்லுமோ செல்லாதே செல்லுமிடம் இன்பமலால்
சொல்லுமோ வேதத் தொனி.
     (பொ - ள்.) யாதும் திருவருளின் திருக்குறிப்பான் நிகழ்வனவேயன்றி மற்றில்லை என்று இடையறாது எப்போதும் எண்ணித் திருவடி நினைவில் பொருந்தும் பொருவிலாத் தூயோர்பால், பிறவிக்கு வித்தாகும் தீங்கு நெறி வந்தணுகுமோ? ஒருபோதும் அணுகாது.

 1. 
'கந்தமலர்க்.' 6. 84 - 4.