| "நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் |
| மாயப் பிறவி உன்வசமே வைத்திட் டிருக்கும் அதுவன்றி |
| ஆயக் கடவேன் நானோதான் என்ன தோவிங் கதிகாரம் |
| காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. |
| - 8. குழைத்தபத்து, 8, |
(51)
சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே | இம்மாயா யோகமினி ஏனடா - தம்மறிவின் | சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம | நிட்டா சிறுபிள்ளாய் நீ. |
(பொ - ள்.) உலகியற் பயனை விரும்பி யோகநிட்டையிலிருக்கும் சிறு பிள்ளையாகிய நீ, மனமிறவாத இம் மாயாகாரிய உலக வேட்கையினால் செய்யும் இவ்வியோகத்தை விட்டொழிப்பாயாக; வேறுபாடற்ற உணர்வுநிட்டை சுட்டறிவினால் வரத்தக்கதோ? அது சொல்ல வேண்டா; சும்மாவிருத்த லெனப்படும் சிவனே என்றிருப்பதால் அழியாப் பேரின்பம் உண்டாகும்.
(52)
நீயற்ற அந்நிலையே நிட்டையதில் நீயிலையோ | வாயற் றவனே மயங்காதே போயற் | றிருந்தாலும் நீபோகாய் என்றுமுள்ளாய் சும்மா | வருந்தாதே இன்பமுண்டு வா. |
(பொ - ள்.) மனமாகிய நீ அடங்குத லெனப்படும் அற்ற நிலையிலே கொள்ளப்படும் யோகத்திடத்திலும் நீ யில்லாம லில்லையே. மவுனநிலை கைவந்தவனே, மயக்க மில்லாமல் வருவாயாக. சிறிதும் வருந்த வேண்டா. மூதறிவு நிலையிலும் பேரின்பம் உண்டு; அம் மனம் அதற்குத் துணையாகவும் நிற்கும்.
(வி - ம்.) இவ்வுண்மை வருமாறு :
| "மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை |
| ஆயஆ ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும் |
| மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை |
| ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்." |
| - சிவப்பிரகாசம், 70 |
(53)
வாவாவென் றின்பம் வரவழைக்குங் கண்ணீரோ | டாவாவென் றேயழுத அப்பனே - நீவாடா | எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி | நில்லாய் அதுவே நிலை. |
(பொ - ள்.) (மௌனகுரு மாணவனை நோக்கிக் கூறுமறை மொழி) பேரின்பப் பெரும் பேற்றை வருவாயாக! வருவாயாக!