பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

49

விளங்கும் அறிவுண்மையால் அம்மாயா காரியப் பொருள்களை முதல்வன் ஆணையால் பயன்படுத்தும் முதன்மையுண்டு. முதல்வன் எல்லாவற்றையும் ஆக்கி அளித்து அழித்தருளும் உண்மையினை வருமாறுணர்க:

"ஆக்கி எவையும் அளித்தா சுடன் அடங்கப்
 போக்குமவன் போகாப் புகல்."
- திருவருட்பயன், 4.
(7)
அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர் சித்த
    ராதி யானோர்
தெரிவரிய பூரணமாய்க் காரணங்கற் பனைகடந்த
    செல்வ மாகிக்
கருதரிய மலரின்மணம் எள்ளிலெண்ணெய் உடலுயிர் போற்
    கலந்தெந் நாளும்
துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத்
    தொழுதல் செய்வாம்.
     (பொ - ள்.) 'அருமறையின் . . . செல்வமாகி' - அரியமறைகளின் முடிமீது விளங்கும் பெரிய பொருளாய்த் தேவர்கட்கும், அவரின் மேம்பட்ட பெரிய முனிவர்கட்கும், சித்தர்கட்கும் ஏனையோர்க்கும் தம்மறிவால் வேறாய் நின்று தெரிந்து கொள்ளத்தக்க நிலைமையில்லாத நிறைவாய் (எல்லாவற்றிற்குங் காரணமெனப்படும்) ஆதித்தன்மையும், கற்பித்துணரப்படும் கற்பனையும் கடந்த அருட்செல்வமாகி.

     'கருதரிய . . . தொழுதல்செய்வாம்' - கருதுதற்கும் எட்டாத மலரின் மணமும், எள்ளின் எண்ணெயும், உடலில் உயிரும் இருப்பது போன்று எங்கணும் எவ்வுயிரிடத்தும் கலந்தருளி, எந்நாளும் பரவெளி-மேனிலை எனப்படும் துரியத்தின் நடுவிருந்த பெரிய பொருள் யாது? அப்பொருளைத் தொழுதல்செய்வாம்.

     (வி - ம்.) இறைவன் முத்திறமாய் நின்றருளும் இயற்கை உண்மையன். அவை ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கும் இயல்பென்ப. ஈண்டு உடலுயிர் என்றது கலப்பினால் ஒன்றாயிருப்பதற்கும், எள்ளில் எண்ணெய் என்றது பொருள் தன்மையால் வேறாயிருப்பதற்கும், மலரின் மணம் என்பது உயிர்க்குயிராதற்றன்மையால் உடனாயிருப்பதற்கும் உவமைகளாயின.

(8)
விண்ணாதி பூதமெல்லாந் தன்னகத்தி லடக்கிவெறு
    வெளியாய் ஞானக்
கண்ணாரக் கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்தக்
    கடலாய் வேறொன்