பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


551


என்னும் ஆருயிர்ப் பண்புகள் நான்கும் இயல்பாகவே இல்லாதவர்; பித்தர்1 வைதாரையும் வாழ்த்தினாரையும் பகுத்துணராது ஒன்றுபோல் நோக்குவர்.

(143)
உண்டுடுத்துப் பூண்டிங் குலகத்தார் போல்திரியுந்
தொண்டர்விளை யாட்டே சுகங்காண் பராபரமே.
     (பொ - ள்) இவ்வுலகோரையொத்து உண்பனவற்றை உண்டும் உடுப்பன உடுத்தும், அணிவன அணிந்தும் நின்திருவடியினை மறவாது வருகின்ற மெய்யடியார்கள் நின்திருவருளால் விளையாடும் விளையாடலைக் கண்டு களிப்பதே அடியேனுக்கு இன்பமாகும்.

(144)
கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.
     (பொ - ள்) மறப்பும் நினைப்புமாகிய கங்குல் பகலற்று எல்லா இடத்திலும் நின்திருவடிக் காட்சியே கண்டுகொண்டிருப்பர்; அத்தகையோர் யாவருங் கண்ட நன்னெறி யொன்றேயாம்.

(145)
காயநிலை அல்லவென்று காண்பார் உறங்குவரோ
தூயஅருட் பற்றாத் தொடர்வார் பராபரமே.
     (பொ - ள்) இவ்வுடம்பு நிலையில்லாத இயல்பினையுடையதென்னும் உண்மையினைக் கண்டவர், நின்திருவடியினை மறந்து தூங்குவரோ? (தூங்கார்.) நின் தூய திருவளருளொன்றனையே பற்றாகக்கொண்டு தொடர்வர்.

(146)
அப்பும்உப்பும் போன்ற அயிக்யபரா னந்தர்தமக்
கொப்புவமை சொல்லவும்வாய் உண்டோ பராபரமே.
     (பொ - ள்) நீரும் உப்பும் ஒன்று கலந்தது 2 போன்று புணர்ந்த மெய்யன்பர் பேரின்பப் பேருணர்வினராவர். அத்தகையோர்க்கு ஒப்புரைக்கவும் வாயுண்டாமோ? (இல்லையென்பதாம்.)

     (வி - ம்) உப்புடன் நீர் கலந்த இடத்து அவ்வுப்பு நீர் முழுவதையும் தன்னகத் தடக்கித் தன் வண்ணமாகச் செய்கின்றது. அதுபோல் முழுமுதல்வன் ஆருயிர்களைத் தன்னகத் தடக்கித் தன் எண் குணங் களையும் அவ்வுயிர்களின்மாட்டு விளங்கச் செய்து தானாக்கியருள்வன். தானாக்குதல் என்பது தனக்கடிமையாக்குதல்.

(147)
சித்தந் தெளிந்து சிவமானோ ரெல்லோர்க்குங்
கொத்தடிமை யான குடிநான் பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் உள்ளந் தெளிந்து சிவனையே விடாது நினைந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய மெய்யடியார் எல்லார்க்கும் அடியேன் கொத்தடிமையான குடியாவேன்.

(148)
 
 1. 
'ஞாலமதின்' சிவஞான சித்தியார், 8. 2 - 22. 
 2. 
'நசித்தொன்றின்' சிவஞானபோதம். 11. 2 - 3