பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

576
சித்திநெறி கேட்டல் செகமயக்கஞ் சன்மமற
முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.
     (பொ - ள்) எண்பெரும் பேற்றை யடைய மிக விரும்பி அதற்குரிய பயிற்சிபெற்ற பெரியோரை யடுத்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதெல்லாம் புகழ் கருதிய உலக மயக்கமேயாம். அதை விடுத்துப் பிறவாமையை விரும்பிப் பிறப்பறும்படியான சிறப்புறும் வீடுபேற்று நெறியினை நல்லாரை நயந்து சார்ந்து நலமுறக் கேட்டுக் கொள்வதே நன்னெறியாம். சித்தி - அட்டமாசித்தி. முத்தி - திருவடிப்பேறு; வீடுபேறு.

(267)
 
சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்
எந்தவகை யாலேவந் தெய்தும் பராபரமே.
     (பொ - ள்) மனமடங்கவும் என்றும் பொன்றா இயல்புசேர் திருவடிப்பேறு வந்து கைகூடவும் வாய்க்கும் நெறி எந்த வகையால் வந்து பொருந்தும்? (இடையறாத் திருவருள் நினைவால் வந்து பொருந்தும்.)

(268)
 
கூர்த்தஅறி வால்அறியக் கூடா தெனக்குரவன்
தேர்த்தபடி தானே திரிந்தேன் பராபரமே.
     (பொ - ள்) திருவருளை முன்னிட்டு அல்லாமல் தன்முனைப்பாகிய சுட்டறிவு சிற்றறிவுகளால் மெய்ப்பொருளை அறியமுடியாதென, அடியேனை ஆட்கொண்டருளிய சிவகுரவன் தெரிந்து தெரிவித்த அருமறைப்படியே, அடியேன் தெரிந்து கொண்டேன்.

(269)
 
பத்த ரருந்தும் பரமசுகம் யானருந்த
எத்தனைநாள் செல்லும் இயம்பாய் பராபரமே.
     (பொ - ள்) மெய்யுணர்வுப் பயனாய் விளைந்த மேலாம் சிவபத்தர் திருவருளால் நுகரும் திருவடிப் பேரின்ப நுகர்வு அடியேன் நுகர இன்னும் எத்தனை நாள் செல்லுமோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(270)
 
தீரத்தி னால்துறவு சேராமல் இவ்வுலகில்
பாரத் தனம்பேசல் பண்போ பராபரமே.
     (பொ - ள்) திண்மை சேர் உள்ளத்துரத்தினால் பொருள்களின் மேலுள்ள பற்றுதலினால் கைகூடும் துறவுநிலையினை மேற்கொள்ளாமல் உலகியல் மயக்கால் வீண் பெருமையாகிய வீறாப்புப் பேசுவதனால் விளையும் பயன் யாது? அது நற்பண்பும் ஆகுமோ? (ஆகாதென்க.)

(271)
 
இந்த வெளியினையுண் டேப்பமிடப் பேரறிவாத்
தந்தவெளிக் கேவெளியாய்ச் சார்ந்தேன் பராபரமே.