பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

631
பஞ்சப் பொறியைஉயி ரென்னும் அந்தப் பஞ்சமறச்
செஞ்செவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) ஐம்பொறிகளே ஆவி என்னும் கொள்கை பொருந்தாதது. அத்தகைய கொள்கை நீங்க, அவ்வைம்பொறிகட்கு வேறாக ஆவியொன்று உண்டென்று திருவருளால் எம்மைக் காண்பதெந் நாளோ? (இந்திரியான்மவாதி)

(4)
அந்தக் கரணமுயி ராமென்ற அந்தரங்க
சிந்தைக் கணத்தில்எம்மைத் தேர்ந்தறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) சித்தம், மனம், ஆங்காரம், புத்தி எனச் சொல்லப்படும் அந்தக்கரண நான்குமே உயிரென்று வந்த கொள்கையினை உள்ளுற ஆய்ந்து நீங்கி அகக்கூட்டத்தின் வாயிலாக எம்மைக் காணுநாள் எந்நாளோ? (அந்தக்கரண ஆன்மவாதி)

(5)
முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்
அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) அமைதி, ஆட்சி, அழுந்தல் எனப்படும் சாத்துவிகம் இராசதம், தாமதம் என்னும் முக்குணத்தையே ஆன்மா என்னும் பிழைபாடான எண்ணம் நீங்கித் திருவருளால் அப்பொழுதே எம்மையறிந்துகொள்வது எந்நாளோ? (முக்குணவான்மவாதி)

(6)
காலைஉயிர் என்னுங் கலாதிகள்சொற் கேளாமல்
சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) உயிர் மூச்சாகிய பிராணனையே ஆருயிரென்னும் தகுதியில்லாதார் சொல்லும் சொற்களைக் கேளாமல் திருவருட்சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வ தெந்நாளோ! (பிராணான்மவாதி) கால் - காற்று; மூச்சு.

(7)
வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போலஎமை
நான்கெடுத்துத் தேடாமல் நன்கறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) எங்கும் நிறைந்துள்ள வானத்தின் கீழிருந்து வானத்தைக் காணவில்லை 1 யென்று தேடுகின்ற அறிவில்லாதாரைப் போன்று அடியேன் பிறவற்றை ஆன்மா என நாடாமல் திருவருளால் எளியேன் உண்மையினைக் கண்டுணர்வ தெந்நாளோ?

(8)
ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்
றானத்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) மாயாகாரிய இவ்வுலகம் பிறப்பினுக்குரிய சுட்டுணர்வினையே பிறப்பிக்கும், அதனால் இவ்வுலகத் தொடர்பு எமக்கு வேண்டுவதில்லை;

 1. 
'மலைகெடுத்தோர்.' திருவருட்யன். 37.