அருண்மயமாய்1 ஆண்டான் திருக்கோலத்தினைக் காட்டும்.
(13)
என்னையுந் தன்னையும் வேறா - உள்ளத் | தெண்ணாத வண்ணம் இரண்டற நிற்கச் | சொன்னது மோஒரு சொல்லே - அந்தச் | சொல்லால் விளைந்த சுகத்தைஎன் சொல்வேன் - சங்கர |
(பொ - ள்) சிற்றுயிராகிய அடியேனையும் பேருயிராகிய (முதல்வன்) தன்னையும் வெவ்வேறாக மனத்தினிடத்து நினையாத வண்ணம், இரண்டறக் கலந்து அடங்கி நிற்குமாறு திருவாய்மலர்ந்தருளியதும், ஒரு மொழியாம் சிவ என்னும் சித்தாந்தப் பெருமொழியே. அம் மொழியின் விளைவாகிய பேரின்பப் பெருநலத்தை எம் மொழியால் எங்ஙனம் சொல்லுவேன்?
(வி - ம்) உடலும் உயிரும் உண்மையின் வேறேயாயினும் கலப்பினால் ஒன்றுபட்டு அவ்வுயிர்க்கு உடலின் வேறு தான் என்னும் எண்ணம் தோன்றுவதில்லை. அதுபோல் முதல்வனும் உயிரும் ஒன்றுபட்டு உயிர் முதல்வனுள் ளடங்கித் தான் வேறு என்னும் எண்ணம் இல்லாதபடி இன்புற்றிருக்கும். நீராடுவோன் நீருளே மூழ்கித் தான் வேறு நீர் வேறு என்னும் நினைப்பின்றி இன்புற்றிருப்பது மேலதற்கொப்பாகும்.
(14)
விளையுஞ் சிவானந்த பூமி - அந்த | வெட்ட வெளிநண்ணித் துட்ட இருளாங் | களையைக் களைந்துபின் பார்த்தேன் - ஐயன் | களையன்றி வேறொன்றுங் கண்டிலன் தோழி - சங்கர |
(பொ - ள்) தோழியே! மாறா இன்பம் விளையும் சிவப்பேரின்பப் பெருநிலம். அது திருச்சிற்றம்பலமென்னும் வெட்டவெளி; திருவருளால் அவ்வறிவுப் பெருவெளியினைப் பொருந்திப் பேரின்பம் விளைய வொட்டாது மறைத்து நிற்கும் கொடிய இருளாகிய களையைக் களைந்து நோக்கினேன். விழுமிய முழுமுதல்வனின் களையெனப்படும் திருஅழகினையல்லாமல் வேறொன்றுங் கண்டிலேன். களை - அழகு.
(15)
கண்டார் நகைப்புயிர் வாழ்க்கை - இரு | கண்காண நீங்கவுங் கண்டோந் துயில்தான் | கொண்டார்போற் போனாலும் போகும் - இதிற் | குணமேது நலமேது கூறாய்நீ தோழி - சங்கர |
(பொ - ள்) தோழியே! உடம்புடனே கூடி உயிர் வாழும் வாழ்க்கை கண்டவர்களால் நகைப்புக்கு இடமானதாகும்.2 சூழ இருப்பவர்களின் இருகண்களும் விழித்துக் கொண்டிருக்க, உடம்பினின்று உயிர் நீங்கவும் கண்டோம். உறங்குவார் போலிருந்து உயிர் நீங்கினும்
1. | 'மாயைமா,' சிவப்பிரகாசம். 70. |
2. | 'குடம்பை,' திருக்குறள், 338. |