நிலையான உண்மைப் பொருளெ1ன்று கொண்டு தானோ பிழைப்பது? அந்தோ! சிவபெருமானுடைய திருவருட் கோலத்தினை அழியாத நிலையான உண்மைப் பொருளென்று கொள்ளவேண்டாவோ?
(23)
வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த | வில்லங்கத் தாலே விளையும் சனனம் | ஆண்டான் உரைத்த படியே - சற்றும் | அசையா திருந்துகொள் ளறிவாகி நெஞ்சே - சங்கர |
(பொ - ள்) மனமே! விருப்பும் வெறுப்புங்2 கொள்ள வேண்டா. அவற்றைக் கொள்ளும் பிணிப்பினாலே, மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கின்றது. அதனால் இவற்றைக் கைவிட்டு எழுந்தருளி வந்த ஆண்டானாகிய ஆசான் அளித்துள்ள அருமறையின் வண்ணமாகச் சிறிதும் சோர்வில்லாமல் அறிவே மயமாகி அசையாதிருந்துகொள், அருமறை - உபதேசம்.
(24)
அறிவாரும் இல்லையோ ஐயோ - என்னை | யாரென் றறியாத வங்கதே சத்தில் | வறிதேகா மத்தீயிற் சிக்கி - உள்ள | வான்பொருள் தோற்கவோ வந்தேன்நான் தோழி - சங்கர |
(பொ - ள்) தோழியே! எளியேனை இன்னதன்மையன் என்று உணருவாருமில்லையோ? அந்தோ! இன்னாரென்று உணராத இவ்வுடம்பில், பயனில்லாமல் எளியேன் காமத்தீயில் பிணிப்புண்டு என்பாலுள்ள மிக மேலான அறிவுப் பொருளை ழந்துவிடவோ யான் வந்துள்ளேன்.
(25)
வந்த வரவை மறந்து - மிக்க | மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும் | இந்த மயக்கை அறுக்க - எனக் | கெந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான் - சங்கர |
(பொ - ள்) மலநீக்கத்தின் பொருட்டுத் திருவருளால் உடலெடுத்து இவ் வுலகத்தில் வந்து பிறந்தோம் என்னும் எண்ணத்தை அறவே மறந்து, மிகவும் ஆசைகொண்டு பெண், பொன், மண் என்னும் மூவகை மயக்கத்திலாழுகின்ற இம் மயக்கத்தை அறுத்தற் பொருட்டு எந்தையாகிய சிவபெருமான் மெய்ஞ்ஞானமென்னும் அழகிய வாளினை அடியேனுக்குக்கொடுத்தருளினன்.
(26)
வாளாருங் கண்ணியர் மோகம் - யம | வாதைக் கனலை வளர்க்குமெய் என்றே |
1. | 'பொருளல்'. திருக்குறள், 351. |
2. | 'வேண்டுதல் வேண்'. "4. |