வேளா னவனுமெய் விட்டான் - என்னில்; | மிக்கோர் துறக்கை விதியன்றோ தோழி - சங்கர |
(பொ - ள்) தோழியே! வாள் போலுங் கண்களையுடைய மையல் மாதர்மேல் கொள்ளும் பெருவேட்கை யென்னும் மோகம் எமதுன்பம் என்று சொல்லப்படும் கொடிய தீயினை வளர்ப்பதாகும். இஃது உண்மையென்றே கண்டு மன்மதனும் தன் உடம்பினை விட்டுவிட்டனன், என்று சொல்வோமானால் மெய்கண்ட மேலோர் தம் உடம்பினை மிகை என்று உளங்கொண்டு அதன்கண் பற்றறுதலாகிய துறக்கை விதியாகுமன்றோ? இக் குறிப்பே "பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பு மிகை" என்பதாம். வேளான் - மன்மதன்.
(27)
விதிக்கும் பிரபஞ்ச மெல்லாஞ் - சுத்த | வெயில்மஞ்ச ளென்னவே வேதாக மங்கள் | மதிக்கும் அதனை மதியார் - அவர் | மார்க்கந்துன் மார்க்கஞ்சன் மார்க்கமோ மானே - சங்கர. |
(பொ - ள்) பெண்ணே! நான்முகனால் உண்டாக்கப்படுகின்ற இவ்வுலகமெல்லாம், காரிய வடிவத்தினால் கடுவெயிலிடைக் காணப்பட்ட மஞ்சள் வெளுத்துத் தோன்றுவது போன்று மழுங்கும். இங்ஙனமே வேதாகமங்கள் மதித்துக் கூறும். அதனை மதியாதவர்கள் கைக்கொண்டொழுகும் நெறி தீநெறியாவதன்றி நன்னெறியாகுமோ? சொல்வாயாக.
(28)
துன்மார்க்க மாதர் மயக்கம் - மனத் | தூயர்க்குப் பற்றாது சொன்னேன் சனகன் | தன்மார்க்க நீதிதிட் டாந்தம் - அவன் | தானந்த மான சதானந்த னன்றோ - சங்கர |
(பொ - ள்) தீ நெறிச் செல்லும் பெண்களிடத்துண்டாகும் மயக்கமானது தூய நன்னெறிச் சல்லும் மனத்தூய்மையுடைய நல்லோரைத் தொடராது. இல்லற வாழ்வினையுடைய சனக வேந்தன் நல்லற முறையாக மெய்யுணர்வு பெற்றமை எடுத்துக்காட்டு. அவன் இடையறா இன்பத்தினை உடையவனாயினன்.
(29)
அன்றென்றும் ஆமென்றும் உண்டோ - உனக் | கானந்தம் வேண்டின் அறிவாகிச் சற்றே | நின்றால் தெரியும் எனவே - மறை | நீதிஎம் மாதி நிகழ்த்தினான் தோழி - |
சங்கர சங்கர சம்பு - சிவ, சங்கர சங்கர சம்பு
(பொ - ள்) தோழியே! விரும்பத் தக்கன அல்லவென்றும் வெறுக்கத்தக்கனவாமென்றும் உலகில் உனக்கு உளவோ? எல்லையில்லா