பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


90


"உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள்
 கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
 திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
 புரையற் றிருந்தான் புரிசடை யோனே."
- 10. 2915.
    'நான துவாக' இருக்கு மெய்ம்மை வருமாறு :

"கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக்
    கழிபரமும் நானல்லேன் எனக்குருதிக் கசிந்த
 தொண்டினொடும் உளத்தவன்தான் நின்றகலப் பாலே
    சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
 விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
    விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
 பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று
    பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே."
- சிவஞானசித்தியார், 9, 3 - 1.
    திருமூலர் அறுபான்மும்மை நாயன்மாருள் ஒருவர். திருவருளால் தனித்தமிழாகமத்தைத் தந்தருளிய செல்வர். திருக்கயிலாயவழி மெய்கண்ட மரபில் வழிவழி வந்த மௌனகுரு அடிகளாரிடம் நம் தாயுமானச் செல்வர் அருமறை கேட்டுக்கொண்டனர். சிவஞானசித்தியாரே இவர்தம் அருமறை. அவ்வுண்மை நம் தாயுமானச் செல்வர் ஓதியருளும் "குருமரபின் வணக்கம்" என்னும் தலைப்பான் உணரலாம்; அது வருமாறு :

"பாதிவிருத் தத்தாலிப் பார்விருத்த மாகவுண்மை
 சாதித்தார் பொன்னடியைத் தாள்பணிவ தெந்நாளோ."
- தாயுமானவர், குருமரபு, 5.
    குறித்த விருத்தம் வருமாறு : 'அறியாமை அறிவகற்றி' (89) (2)

ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கென்
    அறிவன்றி யிடமில்லையோ
  அந்தரப் புட்பமுங் கானலின் நீருமோர்
    அவசரத் துபயோகமோ
போதித்த நிலையையும் மயக்குதே அபயம்நான்
    புக்கஅருள் தோற்றிடாமல்
  பொய்யான வுலகத்தை மெய்யா நிறுத்தியென்
    புந்திக்குள் இந்த்ரசாலஞ்