பக்கம் எண் :

 

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாடிய

சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

1

பாயிரம்

விநாயகக்கடவுள் வணக்கம்

    மாமேவு வான்பிறை முடிப்பிறை இரண்டென்ன
        வாய்க்கடைத் தோற்றியஇரு
    மருப்பிரண் டென்னஅம் கைக்கோ டிரண்டென்ன
        மார்பில்முத் தாரம்என்னப்
    பாமேவு பேர்உதர பந்தம்என அரைசூழ்
        படாம்எனத் தாளின்முத்தம்
    பதித்தகழல் எனவிரவ மேல்ஓங்கு பேருருப்
        பண்ணவனை அஞ்சலிப்பாம்
    ஏமேவு ஞானசபை இறைவர்தம் மேனியின்
        இணங்குற எழுப்புலகெலாம்
    என்னும்மறை ஆதியாக் கொண்டவர் உயிர்க்கருளும்
        இயல்பனைத் தும்தெரித்து
    நாமேவும் அம்முதலோ டொன்றவினை உருபுதொக
        தான்கன்அடி ஆதிசெய்து
    நால்சீரில் நால்நெறி விளக்கிஒளிர் சேக்கிழார்
        நற்றமிழ்க் கவிதழையவே

    [அருஞ்சொல் குறிப்பு]:  மா-பெருமை, மேவு-பொருந்திய, ஏம்-பொன், ஞான  சபை-சிற்சபை, சிதம்பரத்தில் நட