பக்கம் எண் :

New Page 1

104

             காப்புப் பருவம்

முனை அரையர், அதிபத்தர், கலிக்கம்பர்-கலியர், சத்தியார், ஐயடிகள் காடவர் கோன் ஆகிய எட்டு அடியார்கள்.

    விளக்கம்: பிரமன் உயிர்களைப் படைக்கும் தெய்வம்.  அவன் குறிப்பிட்ட ஒரு சாதியினைமட்டும் படைப்பவன் அல்லன்.  உலகில் உள்ள எல்லாச் சாதிகளையும் படைப்பவன். இவ்வாறு கருதுபவர் இந்திய நாட்டு மக்கள்.  புராணங்களின் கருத்தும் இதுவே. இதுவே பலசாதியும் சேரப் படைத்ததேவு எனப்பட்டது.  சேக்கிழார் பெருமானாரும், தம்முடைய படைப்பாகிய பெரிய புராணத்தில் பல சாதியில் தோன்றிய பெரியார்களின் வரலாற்றையும் பாடியுள்ளனர்.  ஈண்டுப் பிரமனினும் சேக்கிழார் பேர்அறிவு படைத்தவர்.  பிரமன் பல சாதியினரை மட்டும் படைத்தவன்.  ஆனால் சேக்கிழார் பெருமானாரோ பல சாதியினைப் பற்றிக் கூறுவதோடு இன்றி, அவ்வச் சாதியின் குறி, குணம், செய்கை, குடி, கொள்ளும் இயல்பு, மொழி, உணவு ஆகிய இவற்றை எல்லாம் அறிந்து இயம்பியவர்.  இதனால்தான் எல்லாம் அறியவலர் எனப்பட்டார்.  பிரமனே படைத்த பல சாதியினர் மறைகின்றனர்.  ஆனால் சேக்கிழார் படைப்பாகிய பெரிய புராணம் மாயாமல் என்று நிலவி வருகின்றது.  இதனால்தான், குமர குருபர சுவாமிகளும்

    கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
    மலரவன் வண்தமிழோர்க்கொவ்வான்-மலரவன்செய்
    வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
    மற்றிவர் செய்யும் உடம்பு.

என்று தெரிந்து கூறினார்.

    சிவனடியார்களைப்பற்றி அறிவிக்கும் நூல்கள் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையும்,நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாழியும் ஆகும்.  திருத்தொண்டத் தொகையின் மூலம் நாம் அறியக் கிடப்பன கீழ்வருவன: திருநீலகண்டர் குயவர் என்பதையும், இயற்பகையார் இல்லையே என்னாத இயல்பினர் என்பதையும்